சண்டியர் விருமாண்டியானார்! ரஜினியின் அடுத்த படம்? விஜய் திரிஷா ஜோடி சேரும் 'கில்லி' குருசாமி எம்.என். நம்பியாரின் சபரிமலை பயணம்
|
|
சிம்பொனி இசையில் திருவாசகப்பாடல்கள் |
|
- கேடிஸ்ரீ|ஜனவரி 2004| |
|
|
|
இசைஞானி இளையராஜா ஓசைப் படாமல் திருவாசகப் பாடல்களுக்கு சிம்பொனி இசை அமைத்துக் கொண்டிருக்கிறார். தமிழ், ஹிந்தி, ஆங்கிலம் மற்றும் ஜெர்மனிய மொழிகளில் இச் சிம்பொனி இசை உருவாக்கப்பட உள்ளது. ஹங்கேரி நாட்டில் புடாபெஸ்ட் நகரில் இதற்கான இசைப் பதிவு நடத்தப்பட உள்ளதாக தெரிகிறது. இதில் இந்தியா மற்றும் ஹங்கேரியைச் சேர்ந்த 200க்கும் மேற்பட்ட இசைக்கலைஞர்கள் கலந்து கொள்கின்றனர்.
அதுமட்டுமல்லாமல் கர்நாடக இசைக் கலைஞர்களில் ஆயிரம் பேருக்கு மேல் பங்கேற்கின்றனர்.
முன்பு 1993ல் லண்டனில் 'லண்டன் ராயல் ·பில்ஹார்மனிக் ஆர்க்கெஸ்ட்ராவுக்காக சிம்பொனி இசையமைத்தார். அன்று இந்த இசையின் மூலம் ஆசியா கண்டத்தில் முதல் சிம்பொனி அமைத்தவர் என்ற பெருமையும், புகழும் இளையராஜாவிற்கு கிடைத்தது. அதற்கு இளைய ராஜா ஒரு மாதம் எடுத்துக் கொண்டார். |
|
தமிழ், இந்தி, ஆங்கிலம் மற்றும் ஜெர்மானிய மொழிகளில் இதனை அமைக்க உள்ளார். 'அன்பு, மானுட சமத்துவம், எளிய வாழ்வு என திருவாசகம் காட்டும் உயர்நெறிகளை உலகறியச் செய்யவும், பலநூறு ஆண்டுகளுக்குப் பின்னரும் நின்று வாழ வேண்டும் என்ற வேண்டுதலோடு செய்யும் தவமாக இந்த சிம்பொனி இசைப்பதிவை இளையராஜா நினைத்து செயல்படுகிறார்.
புத்தாண்டின் முதல் வாரத்தில் ஹங்கேரி செல்லும் இளையராஜா அங்கு திருவாசகப் பாடல்களுக்கு சிம்பொனி அமைத்த பிறகு லண்டன் செல்கிறார். இதற்காக அமெரிக்காவில் உள்ள தமிழர்கள் இளையராஜாவுக்கு நன்றி தெரிவிக்கும் தினமாக கடந்த நவம்பர் மாதம் 27ம் தேதியை அறிவித்தது சிறப்பம்சம் ஆகும்.
கேடிஸ்ரீ |
|
|
More
சண்டியர் விருமாண்டியானார்! ரஜினியின் அடுத்த படம்? விஜய் திரிஷா ஜோடி சேரும் 'கில்லி' குருசாமி எம்.என். நம்பியாரின் சபரிமலை பயணம்
|
|
|
|
|
|
|