பொங்கல் வகைகள் புளிப்பொங்கல் சர்க்கரைப் பொங்கல் கல்கண்டுப் பொங்கல்
|
|
|
தேவையான பொருட்கள்
அரிசி - 2 கிண்ணம் பயத்தம் பருப்பு - 1 கிண்ணம் மிளகு - 1 தேக்கரண்டி சீரகம் - 1 தேக்கரண்டி நெய் - 1 மேசைக்கரண்டி இஞ்சி - 1 துண்டு முந்திரி - 6 பெருங்காயம் - சிறிதளவு உப்பு - தேவைக்கேற்ப கருவேப்பிலை |
|
செய்முறை
அரிசி, பயத்தம்பருப்பை வெறும் வாணலியில் லேசாக வறுத்து உப்புப் போட்டு குக்கரில் வேக விடவும். குழைவாக வேகவேண்டும்.
இஞ்சி, மிளகு, சீரகம், முந்திரி இவற்றை நெய் விட்டு தாளித்துக் கொள்ளவும்.
பெருங்காயத்தையும் அதில் சேர்த்து எல்லாவற்றையும் நன்றாகக் கிளறவும். நன்கு கொதித்தவுடன் கீழே இறக்கி வைத்து கருவேப்பிலை போடவும்.
நெய் தேவை என்றால் கொஞ்சம் விடவும்.
ரவையையும் இதே போல் வறுத்து பொங்கல் செய்யலாம். வேகவிடும் போது 1 டம்ளர் பால் விட்டு செய்தால், 'அடடா! என்ன ருசி' என்பார்கள்.
தங்கம் ராமசுவாமி |
|
|
More
பொங்கல் வகைகள் புளிப்பொங்கல் சர்க்கரைப் பொங்கல் கல்கண்டுப் பொங்கல்
|
|
|
|
|
|
|