எஸ்.என்.பிரபு: பக்திப் பாடல் குறுந்தகடுகள் வெங்கட் சாமிநாதனுக்கு கனடாவில் இயல் விருது பேராசிரியர் மர்ரே பிரான்சன் எமெனோ நூறாவது பிறந்த நாள் விழா எமெனோவின் நன்கொடை தமிழ் சோறு போடுமா? - அனுபவம் தமிழன் வழிகாட்டி 2004 வெளியீடு
|
|
பச்சை மனிதன் |
|
- |பிப்ரவரி 2004| |
|
|
|
பொழுதுபோக்கு என்பது போய், போராட்ட ஆயுதமாய் ஒரு சினிமா 'பச்சை மனிதன்' என்ற பெயரில் உருவாகவுள்ளது.
தமிழர்களின் காவிரி மீதான உரிமையை, காவிரித் தடுப்பால் வாழ்விழந்து தவிக்கும் ஏழை விவசாயிகளின் துயர நிலையை ஒட்டுமொத்த இந்தியாவிற்கும் உணர்த்தும்படியாய் ஒரு திரைப்படத்தை உருவாக்க வேண்டும் என்கிற இலட்சியக் கனவில் வருகிறது 'பச்சை மனிதன்'. இப்படம் தயாரிக்கத் தேவைப்படும் 1.6 கோடி ரூபாயைத் திரட்ட 'பச்சை மனிதன் அறக்கட்டளை'யை டாக்டர் எம்.எஸ். உதய மூர்த்தி, இயக்குநர்கள் சேரன், என். லிங்குச்சாமி, பச்சை மனிதனின் இயக்குநர் ஷரத் சூர்யா ஆகியோர் உருவாக்கியுள்ளனர். இதன் மூலம் எளிய கட்டுக்கோப்பான வழிமுறையில் நிதி திரட்டப்படும்.
தமிழ்நாட்டின் அனைத்துக் கல்லூரிகளிலிருந்தும் சமூக அக்கறையும், தொண்டுள்ளமும் நிறைந்த மாணவர்கள் 16,000 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இவர்கள் அடிப்படை நிதிதிரட்டும் மற்றும் விழிப்புணர்வூட்டும் பணியைச் செய்வர்.
இப்படத்தின் மூலம் கிடைக்கிற எல்லா வருமானமும் 'பச்சை மனிதன் அறக் கட்டளை' வழியே காவிரி விவசாயிகளுக்கு உதவப் பயன்படுத்தப்படும். |
|
மேலும் விவரங்களுக்கு:
பச்சை மனிதன் அறக்கட்டளை பதிவு எண் 370/4/03 9-A, சிவசைலம் தெரு ஹபிபுல்லா ரோடு, தி. நகர் சென்னை 600 017. போன்: 2834 4946 செல் நம்பர்: 98403 44474 |
|
|
More
எஸ்.என்.பிரபு: பக்திப் பாடல் குறுந்தகடுகள் வெங்கட் சாமிநாதனுக்கு கனடாவில் இயல் விருது பேராசிரியர் மர்ரே பிரான்சன் எமெனோ நூறாவது பிறந்த நாள் விழா எமெனோவின் நன்கொடை தமிழ் சோறு போடுமா? - அனுபவம் தமிழன் வழிகாட்டி 2004 வெளியீடு
|
|
|
|
|
|
|