வாழைத்தண்டு ஸ்பெஷல் வாழைத்தண்டு கோசுமல்லி வாழைத்தண்டு பச்சடி வாழைத்தண்டு கறி வாழைத்தண்டு மோர்க்கூட்டு வாசகர் கைவண்ணம்: மீண்டும் 'டோ·பூ' வாசகர் கைவண்ணம்: டோ·பூ ரவை புளி உப்புமா டோ·பூவைப் பாதுகாக்க
|
|
வாசகர் கைவண்ணம்: டோ·பூ சேவை |
|
- |பிப்ரவரி 2004| |
|
|
|
தேவையான பொருட்கள்:
டோ·பூ (கடினமானது) - 16 அவுன்சு (Hard tofu in plastic tub frozen for at least 2 weeks) சேவை (Rice sticks) - 16 அவுன்சு பச்சை மிளகாய் - 2 அல்லது 3 உப்பு - தேவைக்கேற்ப எண்ணெய் - 2 மேஜைக்கரண்டி கடுகு - 2 தேக்கரண்டி உளுத்தம் பருப்பு - 1 மேஜைக்கரண்டி முந்திரிப் பருப்பு - 2 மேஜைக்கரண்டி பெருங்காயப் பவுடர் - 1/8 தேக்கரண்டி கொத்துமல்லித் தழை- 2 மேஜைக்கரண்டி கறிவேப்பிலை - சிறிதளவு |
|
செய்முறை:
டோ·பூவை நன்றாகக் குளிர்நீக்கி (வேகமாகக் குளிர் நீக்கும் வழி இதன் இறுதியில் கொடுக்கப் பட்டுள்ளது) அலம்பி, தண்ணீர் சிறிதும் இல்லாமல் பிழிந்து கொள்ளவும்.
மேலே கூறிய பிழிந்த டோ·பூ, பச்சை மிளகாய் தேவையான உப்பு இவைகளைத் தேங்காய்ப் பூ போல அரைத்துக் கொள்ளவும்.
சேவையை உப்பிட்ட கொதிநீரில் வேக வைத்து வடித்து ஒரு பெரிய கலவைப் பாத்திரத்தில் கொட்டிச் சிறிது ஆற விடவும்.
அடி கனமான பாத்திரத்தில் எண்ணெய் விட்டுக் கடுகு, உளுத்தம் பருப்பு, பெருங்காயத்தூள், முந்திரிப்பருப்பு இவைகளை சலசல எனத் தாளித்து, கறிவேப்பிலை, அரைத்த டோ·பூவை தாளித்ததில் போட்டு ஐந்து நிமிடங்கள் வதக்கி (தேங்காய் துருவலை வறுப்பது போல்) அடுப்பை அணைத்துவிடவும்.
மேலே கூறிய உள்ள வேகவைத்த சேவையுடன், தாளித்து வதக்கிய டோ·பூவை நன்றாகக் கலந்து, பச்சைக் கொத்தமல்லி சேர்த்து உபயோகிக்கவும்.
லலிதா சுந்தரராஜன் |
|
|
More
வாழைத்தண்டு ஸ்பெஷல் வாழைத்தண்டு கோசுமல்லி வாழைத்தண்டு பச்சடி வாழைத்தண்டு கறி வாழைத்தண்டு மோர்க்கூட்டு வாசகர் கைவண்ணம்: மீண்டும் 'டோ·பூ' வாசகர் கைவண்ணம்: டோ·பூ ரவை புளி உப்புமா டோ·பூவைப் பாதுகாக்க
|
|
|
|
|
|
|