Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
March 2004 Issue
ஆசிரியர் பக்கம் | நேர்காணல் | மாயாபஜார் | இலக்கியம் | முன்னோடி | அன்புள்ள சிநேகிதியே | தகவல்.காம் | நூல் அறிமுகம் | கவிதைப்பந்தல்
குறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | புதிரா? புரியுமா? | சமயம் | வார்த்தை சிறகினிலே | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | தமிழக அரசியல் | புழக்கடைப்பக்கம்
நடந்தவை
Tamil Unicode / English Search
நிகழ்வுகள்
க்ரியாவின் 'மாயா'
'வாழும் கலை' வழங்கும் உலக அமைதிக்கு இசை
'தில்லானா' வழங்கும் மண்வாசம்
கிளீவ்லாந்தில் தியாகராஜ ஆராதனை
FFE-பாரதி கலாலயா வழங்கும் நிகழ்கலைகள் மாலை
- |மார்ச் 2004|
Share:
Click Here Enlargeசீர்மை அறக்கட்டளையும் (Foundation for Excellence) பாரதி கலாலயாவும் இணைந்து 'ப்ரதிதி' (நம்பிக்கை) என்ற சுவையான நிகழ்கலைகள் மாலைப்பொழுதை மார்ச் 27, 2004 அன்று சான் ஹோசேவின் வைன் சாலையிலுள்ள CET அரங்கில் வழங்குகின்றன.

பரதநாட்டியம், தனித்தும் குழுவாகவும் வழங்கும் கர்நாடகக் குரலிசை மற்றும் வாத்திய இசை ஆகியவை நிகழ்ச்சியில் அடங்கும். இதை ஏற்பாடு செய்துள்ள அனு சுரேஷ் முன்னின்று அளிப்பார்.

மிகத் திறனுள்ள ஏழை இந்திய மாணவருக்குக் கல்விதொடரப் பொருளுதவி செய்யும் தன்னார்வத் தொண்டு நிறுவனமான சீர்மை அறக்கட்டளை (FFE) சுமார் 7000 மாணவர்களுக்கு 12500 உதவித்தொகை மூலம் 2.6 மில்லியன் டாலர்களை வழங்கியுள்ளது. இதில் நாற்பது சதவிகிதம் தொகை தமிழ்நாட்டு மாணவர்களுக்குச் சென்றுள்ளது. இதர தென்மாநில மாணவர்கள் 30 விழுக்காட்டைப் பெற்றுள்ளனர். மொத்தத்தில் 40 விழுக்காடு மாணவியருக்குச் சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது. பள்ளி மாணவராயின் 120 டாலரும், தொழிற்கல்வி மாணவராயின் 500 டாலரும் உதவித்தொகை தரப்படுகின்றது. இதன் செயல்பாடுகளுக்கு உதவிக்கரம் நீட்ட விரும்புவோர் நன்கொடையைக் காசோலையாக, இணையத்தில் கிரெடிட் அட்டை வழி அல்லது நிகழ்ச்சியில் நேரடியாக வழங்கலாம். அதிக விவரம் அறிய: www.ffe.org

விரிகுடாப் பகுதியின் ·ப்ரீமாண்ட்டில் உள்ள பாரதி கலாலயா வட இந்திய மற்றும் கர்நாடக இசை (குரலிசை மற்றும் கருவிகள்), நடனம் ஆகியவற்றைப் பயிற்றுகிறது. பயிலரங்குகள், நிகழ்ச்சிகள் மேடையேற்றம் மூலமும் மாணவர்கட்கு மேலதிகத் தேர்ச்சியும் வாய்ப்பும் அளிக்கிறது. மேற்கொண்டு அறிய: http://www.bharathikalalaya.com
நுழைவுக் கட்டணம்: 10 டாலர்.

நுழைவுச்சீட்டுகளைக் கீழ்க்கண்ட இடங்களில் பெறலாம்:
FFE 408 985 2001
பாரதி கலாலயா 510 490 4629
விஜயா சிவமணி 408 248 1288
அரங்கத்திலும் நிகழ்ச்சிக்குமுன் பெறலாம்.
நாள்: 27 மார்ச், 2004, சனிக்கிழமை
இடம்: CET Performing Arts Center, Anthony Soto Theatre, 701 Vine Street, San Jose, CA 95110
More

க்ரியாவின் 'மாயா'
'வாழும் கலை' வழங்கும் உலக அமைதிக்கு இசை
'தில்லானா' வழங்கும் மண்வாசம்
கிளீவ்லாந்தில் தியாகராஜ ஆராதனை
Share: 




© Copyright 2020 Tamilonline