சீர்மை அறக்கட்டளையும் (Foundation for Excellence) பாரதி கலாலயாவும் இணைந்து 'ப்ரதிதி' (நம்பிக்கை) என்ற சுவையான நிகழ்கலைகள் மாலைப்பொழுதை மார்ச் 27, 2004 அன்று சான் ஹோசேவின் வைன் சாலையிலுள்ள CET அரங்கில் வழங்குகின்றன.
பரதநாட்டியம், தனித்தும் குழுவாகவும் வழங்கும் கர்நாடகக் குரலிசை மற்றும் வாத்திய இசை ஆகியவை நிகழ்ச்சியில் அடங்கும். இதை ஏற்பாடு செய்துள்ள அனு சுரேஷ் முன்னின்று அளிப்பார்.
மிகத் திறனுள்ள ஏழை இந்திய மாணவருக்குக் கல்விதொடரப் பொருளுதவி செய்யும் தன்னார்வத் தொண்டு நிறுவனமான சீர்மை அறக்கட்டளை (FFE) சுமார் 7000 மாணவர்களுக்கு 12500 உதவித்தொகை மூலம் 2.6 மில்லியன் டாலர்களை வழங்கியுள்ளது. இதில் நாற்பது சதவிகிதம் தொகை தமிழ்நாட்டு மாணவர்களுக்குச் சென்றுள்ளது. இதர தென்மாநில மாணவர்கள் 30 விழுக்காட்டைப் பெற்றுள்ளனர். மொத்தத்தில் 40 விழுக்காடு மாணவியருக்குச் சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது. பள்ளி மாணவராயின் 120 டாலரும், தொழிற்கல்வி மாணவராயின் 500 டாலரும் உதவித்தொகை தரப்படுகின்றது. இதன் செயல்பாடுகளுக்கு உதவிக்கரம் நீட்ட விரும்புவோர் நன்கொடையைக் காசோலையாக, இணையத்தில் கிரெடிட் அட்டை வழி அல்லது நிகழ்ச்சியில் நேரடியாக வழங்கலாம். அதிக விவரம் அறிய: www.ffe.org
விரிகுடாப் பகுதியின் ·ப்ரீமாண்ட்டில் உள்ள பாரதி கலாலயா வட இந்திய மற்றும் கர்நாடக இசை (குரலிசை மற்றும் கருவிகள்), நடனம் ஆகியவற்றைப் பயிற்றுகிறது. பயிலரங்குகள், நிகழ்ச்சிகள் மேடையேற்றம் மூலமும் மாணவர்கட்கு மேலதிகத் தேர்ச்சியும் வாய்ப்பும் அளிக்கிறது. மேற்கொண்டு அறிய: http://www.bharathikalalaya.com
நுழைவுக் கட்டணம்: 10 டாலர்.
நுழைவுச்சீட்டுகளைக் கீழ்க்கண்ட இடங்களில் பெறலாம்: FFE 408 985 2001 பாரதி கலாலயா 510 490 4629 விஜயா சிவமணி 408 248 1288 அரங்கத்திலும் நிகழ்ச்சிக்குமுன் பெறலாம். நாள்: 27 மார்ச், 2004, சனிக்கிழமை இடம்: CET Performing Arts Center, Anthony Soto Theatre, 701 Vine Street, San Jose, CA 95110 |