தென்றல் வாசகர்களுக்கு,
|
|
மிச்சிகனில் தமிழ் வகுப்பு: குறிப்பு |
|
- |ஜனவரி 2007| |
|
|
|
இடம்: ஆபர்ன் ஹில்ஸ் (AUBURN HILLS) மிக்சிகன். ஆசிரியர்: திருமதி காந்தி சுந்தர் மின்னஞ்சல்: subham66@yahoo.com
வாரம் ஒருமுறை, ஒரு மணி நேரம் நடக்கும் இந்த தமிழ் வகுப்பிலே, தற்போது ஒரு அமெரிக்கர் உட்பட, எட்டு மாணவர் கள் தமிழ் கற்று வருகின்றனர். இந்த வகுப்புகளில் தமிழ் பேச, எழுத மற்றும் படிக்கக் கற்றுத் தரப்படுகிறது. அதிலும் குறிப்பாக, தமிழ் பேசுவதில் அதிக கவனம் செலுத்ததுப்படுவது குறிப்பிடத்தக்கது.
ஆசிரியர் திருமதி காந்தி சுந்தர் அவர்கள், குழந்தைகளிடம் முழுவதும் தமிழில் பேசுவதால், மாணவர்களின் வெட்கம் மற்றும் தயக்கத்தைப் போக்க இது மிகவும் உதவுகிறது. ''யானை யானை'யில்
தொடங்கி ''ஓடி விளையாடு பாப்பா'' வரை வாரம் ஒரு தமிழ் பாடல் கற்றுக் கொடுப்பதுடன் சிறுசிறு பயிற்சிப் பாடங்களையும் வீட்டில் எழுதி வரச் செய்கிறார்.
தொலைபேசி மூலம் தொடர்பு கொள்ளும் போதும் மாணவர்களிடம் தமிழில் பேசி அவர்களை இந்தியாவில் வாழும் அவர்களது உறவினர்களிடமும் தமிழில் பேச ஊக்குவிப்பதும் ஒரு முக்கிய
யுக்தியே! கணினியை அதிகம் பயன் படுத்தி, குறிப்பாக tamilvu.org -ல் அனைத்துப் பாடங்களையும் இணைந்து படிப்பது நல்ல
முறையில் பயனைத் தருகிறது. Show & Tell முலம் தமிழ் வார்த்தைகளின் ஞாபக சக்தியை வளர்க்கவும் முயற்சி செய்யவும் திட்ட மிட்டுள்ளார் திருமதி காந்தி சுந்தர். |
|
எல்லா மாணவர்களையும் இணைத்து வருடத்திற்கு இருமுறை ஏதேனும் கலைநிகழ்ச்சியை ஏற்பாடு செய்து அவர்கள் கற்றதை வெளிக்கொணர செய்வதால், பெற்றோர்களும் மிகவும் ஊக்குவிக்கப்பட்டு,
இந்த முயற்சிக்கு உறுதுணையாக இருக்கிறார்கள்.
மேலும் விபரம் அறிய: subham66@yahoo.com |
|
|
More
தென்றல் வாசகர்களுக்கு,
|
|
|
|
|
|
|