அம்மாவே இனிஷியலாக... ஆச்சி வருகிறார் அலியாக தேர்தல் வானில் திரை நட்சத்திரங்கள்! முதல்வர் தாத்தாவின் சினிமா வாரிசு மே மாதம் திரைக்கு வரும் பேரழகன் இந்திப் படம் பிடிக்காத நந்திதா!
|
|
ரஜினியின் அடுத்த படம் |
|
- கேடிஸ்ரீ|மே 2004| |
|
|
|
ரஜினிகாந்த் இயக்குநர் கே.எஸ். ரவிக்குமார், தேஜா, ஹரி, எஸ்.ஜே. சூர்யா என சுமார் 25 பேரிடம் தனது அடுத்த படத்துக்கான கதையைக் கேட்டுள்ளார். இதுவரை சுமார் 80 கதைகளை ஆலோசித்தும் எந்தவித முடிவும் எடுக்காமல் இருந்த ரஜினி ஒருவழியாக ரவிக்குமார் சொன்ன கதையே சரியானது என்ற முடிவுக்கு வந்துவிட்டார்.
இதுபற்றி கே.எஸ். ரவிக்குமாரை நேரிடையாக அழைத்துப் பேசியுள்ளதாகத் தெரிகிறது. இதற்கிடையில் தேர்தல் வந்துவிட ரஜினிகாந்தால் படவிஷயங்களில் முனைப்பாகச் செயல்பட முடியாமல் போய்விட்டது. எனவே தேர்தல் முடிந்ததும் படப்பணிகளைத் துவக்க முடிவு செய்திருப்பதாக தெரிகிறது.
படப்பிடிப்பு இடங்களையும், தொழில் நுட்பக் குழுவினரையும் கூட ரஜினி தேர்வு செய்து விட்டார். பாபா படம் போல் இந்தப் படத்தின் கதை வெளியே கசிந்துவிடக் கூடாது என்பதில் அதிக கவனம் செலுத்தும் ரஜினி, படப்பிடிப்பை வேறு மாநிலத்தில் நடத்தத் திட்டமிட்டு உள்ளார். மே 10ம் தேதிக்குப் பிறகு படத்திற்கான முறையான அறிவிப்பு வரலாம். |
|
கேடிஸ்ரீ |
|
|
More
அம்மாவே இனிஷியலாக... ஆச்சி வருகிறார் அலியாக தேர்தல் வானில் திரை நட்சத்திரங்கள்! முதல்வர் தாத்தாவின் சினிமா வாரிசு மே மாதம் திரைக்கு வரும் பேரழகன் இந்திப் படம் பிடிக்காத நந்திதா!
|
|
|
|
|
|
|