லாடுகள் பலவிதம் பன்னீர் லாடு மோகன் லாடு பூந்தி லாடு (லட்டு) பாதாம் லாடு பொரிவிளங்காய் லாடு (உருண்டை) கோதுமை மாவு பூரி லாடு கடலைமாவு லாடு பயத்த மாவு லாடு
|
|
|
தேவையான பொருட்கள்
அவல் - 1 கிண்ணம் தேங்காய்த் துறுவல் (புதியது) - 1/4 கிண்ணம் பொடியாக்கிய சர்க்கரை - 1/4 கிண்ணம் நெய் - 2 மேசைக்கரண்டி ஏலக்காய்ப் பொடி - சிறிதளவு வறுத்து ஒடித்த முந்திரிப்பருப்பு - 1 மேசைக்கரண்டி |
|
செய்முறை
தேங்காயை எண்ணெய் விடாமல் வாணலியில் பொன்னிறமாக வறுத்துக் கொள்ளவும். அடி கனமான பாத்திரத்தில் சிறிது நெய் ஊற்றி அவலைப்போட்டுப் பொன்னிறமாக வாசனை வரும் வரை வறுத்துக்கொள்ளவும்.
சற்று ஆறியபின்பு இதை மிக்ஸியில் ரவை போலப் பொடி செய்து கொள்ளவும். இத்துடன் வறுத்த தேங்காய்த் துறுவல், பொடித்த சர்க்கரை, ஏலப்பொடி, முந்திரிப் பருப்பு சேர்த்து நன்றாகக் கலக்கவும்.
நெய்யை நன்கு சூடுபடுத்தி இதில் விட்டுக் கரண்டியால் கலந்து வேண்டிய அளவில் எடுத்து உள்ளங்கையில் வைத்து அழுத்தி உருண்டைகளாகப் பிடித்து வைக்கவும். உருண்டை பிடிக்க வரவில்லையெனில் இளம் சூடான பால் ஒரு மேசைக்கரண்டி சேர்த்துப் பிடிக்கவும்.
சரஸ்வதி தியாகராஜன் |
|
|
More
லாடுகள் பலவிதம் பன்னீர் லாடு மோகன் லாடு பூந்தி லாடு (லட்டு) பாதாம் லாடு பொரிவிளங்காய் லாடு (உருண்டை) கோதுமை மாவு பூரி லாடு கடலைமாவு லாடு பயத்த மாவு லாடு
|
|
|
|
|
|
|