வளைகுடாப் பகுதி தமிழ்மன்றத்தின் குழந்தைகள் தினம் இர்வைனில் சிலப்பதிகாரம் கூப்பர்டினோவில் தீபாவளித் திருவிழா
|
|
சன்ஹிதியின் வானவில் |
|
- அருணா|அக்டோபர் 2004| |
|
|
|
'வானவில் - தமிழ் ஆடற்களத்தின் வழியே ஒரு வண்ணப் பயணம்' என்ற கருத்திலான ஒரு நாட்டிய நிகழ்ச்சியை நவம்பர் 7, 2004 அன்று, பாலோ ஆல்டோ(கலி.) கப்பர்லி அரங்கத்தில் வழங்கவிருக்கிறது சன்ஹிதி தென்னிந்திய நடனக் குழு. வளைகுடாப் பகுதியில் வெவ்வேறு துறைகளில் பணிபுரிவோர் 30 பேரின் ஆர்வக் கூட்டமைப்பான சன்ஹிதியை ஜனனி நாராயணன், ப்ரியா கிருஷ்ணமூர்த்தி மற்றும் ரூபா பரமேஸ்வரன் ஆகியோர் உருவாக்கியுள்ளனர். சன்ஹிதி என்ற வடமொழிச் சொல்லுக்கு 'ஒன்றுபடுதல்' என்பது பொருளாம்.
இந்த நிகழ்ச்சியின் பெயர் ஏன் 'வானவில்'? "தமிழ்நாட்டின் அனைத்து நடன வகை களையும் இதில் வழங்குவோம். பரத நாட்டியம், பகுதிச் செவ்வியல் நடனங்கள், கிராமிய நடனம், திரையிசை நடனம் - எல்லாமே எங்களுக்கு ஏற்புடையது. எனவேதான் இது 'வானவில்'.
தங்கள் முதல் நிகழ்ச்சியை வழங்குவதற்குத் தீவிரப் பயிற்சியில் ஈடுபட்டிருக்கும் இந்த நடன மணிகள் நற்பணிகளுக்கு நிதி திரட்டும் நிகழ்ச்சிகளை கூடிய விரைவில் சன்ஹிதி ஈடுபடும் என்கிறார்கள். ஒரே குடையின்கீழ் எல்லா நாட்டிய ஆர்வலர்களையும் சேர்த்து, அவர்களுக்கு மேடையேறும் வாய்ப்பை வழங்குவோம் என்பதையும் ஒரு நோக்கமாகக் கூறுகிறார்கள். சன்ஹிதி உள்நாட்டு வருவாய்த் துறை (IRS) பதிவுபெற்ற நிறுவனம்.
நாள்: நவம்பர் 7, 2004, ஞாயிறு; பிற்பகல் 4:00 மணி
இடம்: Cubberly Theater, Palo Alto, California
நுழைவுச் சீட்டு: $ 12. |
|
வாங்கத் தொடர்புகொள்க: Janani: 408.241.3472 Subha: 408.986.8805
இணையத்தளம்: www.sanhiti.org
அருணா கிருஷ்ணன் |
|
|
More
வளைகுடாப் பகுதி தமிழ்மன்றத்தின் குழந்தைகள் தினம் இர்வைனில் சிலப்பதிகாரம் கூப்பர்டினோவில் தீபாவளித் திருவிழா
|
|
|
|
|
|
|