காதில் விழுந்தது......
|
|
|
தேசியப் புத்தகப் பரிசு: 9/11 விசாரணைக் குழுவின் அறிக்கைக்குமா?
9/11 விசாரணைக் குழுவின் இறுதி அறிக்கை அமெரிக்க தேசிய புத்தகப் பரிசுக்கான இறுதிச்சுற்றுக்குத் தகுதிபெற்ற புனைகதையல்லாத நூல்களின் பட்டியலில் இடம்பெற்றுள்ளது. நவம்பர் 17-ஆம் தேதியன்று வெற்றிபெற்ற நூல்கள் அறிவிக்கப்படும். அதில் இவ்வறிக்கை இடம்பெற்றால் அதுவும் ஒரு உலகச் சாதனையாகத்தான் இருக்கும்.
புதினங்களுக்கான இறுதிச் சுற்றுப் பட்டியலில் ஒரு ஆண் எழுத்தாளரும் இல்லை என்பதும் இப்பரிசுகளின் வரலாற்றிலேயே முதல்முறையாம்.
*****
பார்வையில்தான் வித்தியாசம்
'மனசே ரிலாக்ஸ் ப்ளீஸ்' புகழ் சுவாமி சுகபோதானந்தா சொன்ன ஒரு குட்டிக்கதை:
ஒரு நாய்க்கும், பூனைக்கும் இடையே சுவாரசியமான உரையாடல் ஒன்று நடந்தது. "நான் அதிர்ஷ்டக்காரன். வீட்டு எஜமானர் நல்ல உணவளிக்கிறார். குழந்தைகள் மிகுந்த அன்பாக இருக்கிறார்கள். அவர்களைக் கடவுள் என்று நான் நினைக்கிறேன்" என்று நாய் சொன்னது.
அதற்குப் பூனை சொன்னது, "என் எஜமானர் செல்லம் கொஞ்சுகிறார். வீட்டுக் குழந்தைகள் மிகுந்த அன்பு காட்டுகின்றனர். வேலைக்காரி சாப்பாடு கொடுக்கிறாள். எனவே நானே கடவுள் என்று உணர்கிறேன்."
எல்லாம் உங்கள் பார்வையில்தான் இருக்கிறது.
*****
பகவான் ரமணர் சத்சங்கங்கள்
திருவண்ணாமலையின் ஆன்மிகப் பெருஞ்சோதியான பகவான் ரமண மகரிஷியின் 125ஆவது ஜெயந்தி விழா இந்த ஆண்டு டிசம்பர் 28 முதல் 3 நாள் விழாவாகக் கொண்டாடப்படவிருக்கிறது.
சத்சங்கங்கம், தியானம், வழிபாட்டுப் பாடல் ஆகியவை அமெரிக்கப் பெருநகரங்கள் பலவற்றிலும் நடைபெறுகின்றன. நீங்கள் பங்குபெற விரும்பினால் விவரம் இதோ:
நியூ யார்க்கில்: Bhagawan Sri Ramana Maharshi Center, 66-12 Clyde Street, Rego Park, New York 11374, USA. தொலைபேசி: 718 575 3215. மின்னஞ்சல்: ashrama@aol.com
இணையத் தளம்: www. arunachala.org |
|
பிற நகரங்களில் பங்குபெற விரும்புவோர் கீழ்க்கண்டவாறு தொடர்புகொண்டு தகவல் அறியலாம்:
தகவல்: மங்களம் கல்யாணம் |
|
|
More
காதில் விழுந்தது......
|
|
|
|
|
|
|