தொக்கு வகைகள் II கொத்துமல்லித் தொக்கு பச்சைத் தக்காளி - பச்சை மிளகாய்த் தொக்கு வெஜிடபிள் தொக்கு காரட்-தக்காளித் தொக்கு
|
|
|
தேவையான பொருட்கள்:
பச்சை மிளகாய் நறுக்கியது - 1 கிண்ணம் புளி - ஒரு சின்ன எலுமிச்சை அளவு கடுகு - 1 தேக்கரண்டி உளுத்தம் பருப்பு - 2 தேக்கரண்டி பெருங்காயம் - 1 தேக்கரண்டி ந. எண்ணெய் - 4 மேசைக் கரண்டி உப்பு - தேவைக்கேற்ப வெல்லம் - தேவைக்கேற்ப |
|
செய்முறை
வாணலியில் எண்ணெய் விட்டு உளுத்தம்பருப்பு, பெருங்காயம் வறுத்து எடுத்துக் கொண்டு, மிளகாயைத் துளி எண்ணெய் விட்டு வதக்கி புளி, உப்பு, வதக்கிய மிளகாய், பருப்பு இவற்றை நைசாக மிக்சியில் அரைத்துக் கொள்ளவும். வாணலியில் எண்ணெய்விட்டு கடுகு, பெருங்காயம் தாளித்து, பின் அரைத்த விழுதைப் போட்டு நன்கு வதக்கவும். வெல்லம் போட்டு வெல்ல வாசனை போகக் கிளறி, சுருண்டு வரும்போது எடுத்து வைக்கவும். இது சுவை மிகுந்த தொக்கு. இட்லி, தோசைக்கும் சாதத்திறகும் தொட்டுக் கொள்ளலாம்.
தங்கம் ராமசாமி |
|
|
More
தொக்கு வகைகள் II கொத்துமல்லித் தொக்கு பச்சைத் தக்காளி - பச்சை மிளகாய்த் தொக்கு வெஜிடபிள் தொக்கு காரட்-தக்காளித் தொக்கு
|
|
|
|
|
|
|