வளைகுடாப் பகுதித் தமிழ்மன்றம் - மார்கழி நாடக விழா லாஸ் ஏஞ்சலஸில் தமிழ் நத்தார் ஆராதனை மிச்சிகனில் அம்மா மிச்சிகனில் ஆசிய வண்ணங்கள் கிழக்குக் கடற்கரையில் இருந்து.. பேரா. ஆண்டியின் புத்தக ஆய்வு மங்கையின் நாடகப் பட்டறை குறும்படங்களின் மூலம் சமூக மாற்றங்கள் - கலந்துரையாடல் உலகத் தமிழ் அமைப்பின் மாநாடு (WTO - World Tamil Organization)
|
|
நியூயார்க்கில் பாரதி விழா |
|
- |ஜனவரி 2005| |
|
|
|
நியூயார்க்கிலுள்ள அமெரிக்க பாரதிக் கழகம் டிசம்பர் 11, 2004 அன்று ·பிளஷிங்கிலுள்ள ஹிந்துக் கோவில் வளாகத்தில் பாரதியார் தினம் கொண்டாடியது. நடன ஆசிரியைகளான ரங்கநாயகி ஸ்ரீனிவாசன், சாவித்திரி ராமானந்த், சத்யா பிரதீப், சாதனா பரஞ்சி, சந்திரகலா ராகவன் மற்றும் ரமேஷ் ராமநாதன் தமது ஐம்பதுக்கு மேற்பட்ட மாணக்கர்களோடு பங்கேற்றனர். நிகழ்ச்சியில் பாரதியின் பாடல்கள் பாடப்பட்டதோடு, நடன நிகழ்ச்சிகளும் வழங்கப்பட்டன.
சங்கத்தின் தலைவர் டாக்டர் ஆண்டாளி ரகுநாத் வரவேற்புரை வழங்கினார். நிகழ்ச்சி துவங்குமுன் அன்று அமரரான எம்.எஸ். சுப்புலட்சுமி அவர்களுக்காக ஒரு நிமிட மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. முதல் நிகழ்ச்சியாக 'கற்பக வினாயகக் கடவுளே' என்ற பாடல் அமைந்தது. 'முருகா முருகா', 'உஜ்ஜயினி நித்ய கல்யாணி' ஆகிய பாடல்கள் தொடர்ந்தன. 'திக்குத் தெரியாத காட்டில்', 'ஓம்சக்தி', 'காயிலே புளிப்பதென்ன' ஆகியவை தவிர பாரதியின் கும்மி, கோலாட்டம், நாட்டுப்புறப் பாடல்களுக்கும் அருமையாக அமைந் திருந்தன நடனங்கள். மாலதி பத்மனாபன் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார். |
|
அதிக விவரங்களுக்கு: 516 796 3509 மின்னஞ்சல் முகவரி: bharathisociety@hotmail.com |
|
|
More