பிரம்மஸ்ரீ பண்டிட் சந்திரமௌளி நாராயண சாஸ்திரிகள்
|
|
இந்திரா சௌந்தர்ராஜன் |
|
- |டிசம்பர் 2024| |
|
|
|
|
தனது ஆன்மீக, அமானுஷ்ய நாவல்களாலும், பக்தி உரைகளாலும், தொலைக்காட்சித் தொடர்களாலும் சித்தரியல் குறித்தும், ஆன்மீகம் குறித்தும் பல தகவல்களைப் பரப்பிய எழுத்தாளர் இந்திரா சௌந்தர்ராஜன் (65) காலமானார். 1978ல் கலைமகள் குறுநாவல் போட்டியில் பரிசு பெற்று எழுத்துத் துறைக்குள் நுழைந்த இந்திரா சௌந்தர்ராஜன் ஆரம்பத்தில் சமூகக் கதைகளையே எழுதிக் கொண்டிருந்தார். பின்னர் தன் பாணியை அமானுஷ்யம், ஆன்மீகம், சித்தரியல், மாயம், மர்மம், மாந்த்ரீகம் என மாற்றிக் கொண்டார். தனக்குப் போட்டி என்பதே இல்லாத அளவுக்குப் பல்வேறு களங்களில் நூற்றுக்கணக்கான நாவல்களை எழுதினார்.
சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான இவரது விடாது கருப்பு, விட்டு விடு கருப்பா, ருத்ர வீணை, சிவமயம் போன்ற தொடர்கள் இவரைப் புகழின் உச்சிக்கே கொண்டு சென்றன. ஒரு சில திரைப்படங்களுக்கு வசனம் எழுதினார். தேசிய விருது பெற்ற ‘சிருங்காரம்’ இவரது கதை வசனத்தில் வெளியான திரைப்படம்.
பல்வேறு விருதுகளையும், கௌரவங்களையும் பெற்ற இந்திரா சௌந்தர்ராஜன் சொற்பொழிவில் கவனத்தைத் திருப்பினார். காஞ்சி மஹாபெரியவர் போன்ற மகான்கள் குறித்தும் இந்துமதம் குறித்தும் தொடர்ந்து பல்வேறு சொற்பொழிவுகளை நிகழ்த்தி வந்தார். இவர் ஸ்ரீ சத்ய சாயி பாபா மீதும் ஈடுபாடு கொண்டிருந்தார். இவருக்கு ராதா என்ற மனைவியும், ஐஸ்வர்யா, ஸ்ரீநிதி என்ற இரு மகள்களும் உள்ளனர்.
மேலும் வாசிக்க |
|
இந்திரா சௌந்தர்ராஜனுக்குத் தென்றலின் அஞ்சலி! |
|
|
More
பிரம்மஸ்ரீ பண்டிட் சந்திரமௌளி நாராயண சாஸ்திரிகள்
|
|
|
|
|
|
|