சென்னையில் அயலகத் தமிழர் நாள் சாகித்ய அகாதமி விருது
|
|
BAPASI விருதுகள் |
|
- |ஜனவரி 2024| |
|
|
|
|
சென்னையின் குறிப்பிடத் தகுந்த நிகழ்வுகளுள் ஒன்று ஆண்டுதோறும் ஜனவரியில் நடக்கும் புத்தகக் கண்காட்சி. 47-வது சென்னை புத்தகக் காட்சி சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் ஜனவரி 3, 2024 அன்று தொடங்கி ஜனவரி 21 வரை நடக்கிறது. விழாவைத் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.
தொடக்க விழாவின்போது, தமிழில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் படைப்பாளிகள், பதிப்பகத்தார் தேர்ந்தெடுக்கப்பட்டு விருதுகள் வழங்கிச் சிறப்பிக்கப்படுவர். அந்த வகையில் பின்வருவோர் இவ்வாண்டின் சிறந்த படைப்பாளிகளுக்கான கலைஞர் பொற்கிழி விருது பெறுகின்றனர்.
கலைஞர் பொற்கிழி விருது:
எழுத்தாளர்கள் ஆய்வு/உரைநடை: பேரா.ஆ. சிவசுப்பிரமணியன் நாவல்: தமிழ்மகன் சிறுகதை: அழகிய பெரியவன் கவிதை: கவிஞர் உமா மகேசுவரி மொழிபெயர்ப்பு: மயிலை பாலு நாடகம்: வேலு சரவணன்
★★★★★
பதிப்பாளர்கள் விருது பதிப்பகச் செம்மல் க. கணபதி விருது: ச. அனுஷ் (எதிர் வெளியீடு) சிறந்த நூலகர்: எம். ஆசைத்தம்பி (திருவாரூர்) புத்தக விற்பனையாளருக்கான பதிப்புச் செம்மல் ச. மெய்யப்பன் விருது: கிரி டிரேடிங் கம்பெனி சிறந்த குழந்தை எழுத்தாளருக்கான கவிஞர் அழ. வள்ளியப்பா விருது: சி.எஸ். தேவநாதன் சிறந்த தமிழறிஞருக்கான பாரி செல்லப்பனார் விருது: குழ. கதிரேசன் (ஐந்திணை பதிப்பகம்) சிறந்த பெண் எழுத்தாளருக்கான முதல் பெண் பதிப்பாளர் அம்சவேணி பெரியண்ணன் விருது: இன்பா அலோசியஸ் சிறுவர் அறிவியல் நூலுக்கான நெல்லை சு. முத்து விருது: மு. வேலையன் சிறந்த கவிஞருக்கான ஆலந்தூர் கோ. மோகனரங்கன் கவிதை இலக்கிய விருது: இலக்கியா நடராஜன் (சிவகங்கை) சிறந்த தன்னம்பிக்கை நூலுக்கான கவிதாசன் விருது: கமலநாதன்
விருது பெறுவோருக்குப் பாராட்டு சான்றிதழுடன் ரூ.1 லட்சம் பரிசுத் தொகை வழங்கப்படும். |
|
விருதாளர்களுக்குத் தென்றலின் நல்வாழ்த்துக்கள் |
|
|
More
சென்னையில் அயலகத் தமிழர் நாள் சாகித்ய அகாதமி விருது
|
|
|
|
|
|
|