யாதும் தமிழே - தமிழ் திரு விருதுகள் தமிழ்ப் பேராய விருதுகள் 2023 ஈஷா: அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இயற்கை விவசாய களப்பயிற்சி
|
|
ஜே.சி.பி. இலக்கிய விருது |
|
- |டிசம்பர் 2023| |
|
|
|
|
இந்தியாவில் அதிக பணமதிப்புக் கொண்ட விருதான ஜே.சி.பி. இலக்கிய விருது (JCB Prize for Literature), இவ்வாண்டு (2023) பெருமாள் முருகனுக்கு வழங்கப்பட்டுள்ளது. 'ஆளண்டாப்பட்சி' என்னும் நாவலின் ஆங்கில மொழிபெயர்ப்பான 'Fire Bird' நூலுக்காக இவ்விருது அவருக்குக் கிடைத்துள்ளது.
கனரக வாகனத் தயாரிப்பு நிறுவனங்களுள் ஒன்று ஜே.சி.பி. குழுமம். இதன் இலக்கிய அறக்கட்டளை அமைப்பு, கடந்த ஆறு ஆண்டுகளாக இப்பரிசை வழங்கிவருகிறது. நேரடியாக ஆங்கிலத்தில் வெளியாகும் இந்திய எழுத்தாளர்களின் நாவல்களுக்கும், இந்திய மொழிகளிலிருந்து ஆங்கிலத்துக்கு மொழிபெயர்க்கப்படும் நாவல்களுக்கும் இவ்விருது வழங்கப்படுகிறது. இதற்கு முன் கேரள எழுத்தாளர்கள் பென்யாமின், ஹரீஷ், முகுந்தன், கர்நாடக எழுத்தாளர் மாதுரி விஜய், உருது எழுத்தாளர் காலித் ஜாவேத் ஆகியோர் இவ்விருதைப் பெற்றுள்ளனர். இவ்வாண்டு பெருமாள் முருகன் பெற்றுள்ளார்.
அமெரிக்காவைச் சேர்ந்த ஜனனி கண்ணன் இந்த நாவலை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார். எழுத்தாளருக்கு 25 லட்சம், மொழிபெயர்ப்பாளருக்கு 10 லட்சம் என 35 லட்சம் பணப் பரிசைக் கொண்டது இவ்விருது. |
|
பெருமாள் முருகனுக்குத் தென்றலின் வாழ்த்துகள். |
|
|
More
யாதும் தமிழே - தமிழ் திரு விருதுகள் தமிழ்ப் பேராய விருதுகள் 2023 ஈஷா: அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இயற்கை விவசாய களப்பயிற்சி
|
|
|
|
|
|
|