தெரியுமா?: சாருநிவேதிதாவுக்கு விஷ்ணுபுரம் விருது தெரியுமா?: தன்வந்திரி விருது
|
|
தெரியுமா?: வெளிநாடுவாழ் இந்தியர் தினம் |
|
- |அக்டோபர் 2022| |
|
|
|
|
பிரவாசி பாரதீய திவஸ் (PBD) எனப்படும் வெளிநாடுவாழ் இந்தியர் தினம் 2023 ஜனவரி மாதம் 8 முதல் 10 தேதிவரை பாரதத்தின் மத்தியப் பிரதேச மாநிலத்தில் உள்ள இந்தூர் நகரில் கொண்டாடப்படும். முதல்நாளன்று இளைஞர் தினமும், அடுத்த இரண்டு நாட்களில் தொடக்கவிழா, சிறப்பு அமர்வுகள், நிறைவு விழா ஆகியவையும் நடைபெறுவது வழக்கம். நிகழ்ச்சி நிரல் விவரங்கள் உரிய காலத்தில் வெளியிடப்படும். உயர்நிலை சிறப்பு விருந்தினர்கள் இந்த மாநாட்டைத் துவக்கி வைப்பர்.
அமெரிக்காவில் செயல்திறன்மிக்க இந்திய சமுதாயம் உள்ளது. அவர்கள் இந்த மாநாட்டில் பெரும் எண்ணிக்கையில் பங்கேற்பர் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தத் தேதிகளை உங்கள் நாட்குறிப்பில் இதற்கென ஒதுக்கி வைக்க ஏதுவாக இந்தச் செய்தி முன்கூட்டி வெளியிடப்படுகிறது. பல சுவையான அமர்வுகள், மத்தியப்பிரதேச சுற்றுலா ஏற்பாடுகள் தவிர உலகெங்கிலுமிருந்து வரும் பாரதத்தினரைச் சந்திக்கும் வாய்ப்பும் இந்த மாநாட்டில் கிடைக்கும். முன்னோடி இந்திய அமைப்புகளும் தலைவர்களும் ஆர்வத்தோடு இதில் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கிறோம்.
மேலும் தகவல்கள் அவ்வப்போது வெளியிடப்படும். |
|
தகவல்: Dr. T.V. நாகேந்திரப் பிரசாத், கான்சல் ஜெனரல், சான் ஃபிரான்சிஸ்கோ |
|
|
More
தெரியுமா?: சாருநிவேதிதாவுக்கு விஷ்ணுபுரம் விருது தெரியுமா?: தன்வந்திரி விருது
|
|
|
|
|
|
|