தெரியுமா?: 'லக்ஷ்மி - நினைவில் நின்ற உணவுக் குறிப்பு' - வீடியோ போட்டி தெரியுமா?: இந்திய அரசின் 'நாரீ சக்தி புரஸ்கார்' தெரியுமா?: இலக்கிய மாமணி விருது செவாலியே விருது தமிழன் விருது
|
|
'மிஸ்டர் காப்ளர்' குறும்படத்திற்கு விருது |
|
- |ஆகஸ்டு 2022| |
|
|
|
|
அமெரிக்காவில் நடந்த சர்வதேசக் குறும்பட விழாவில் 'மிஸ்டர் காப்ளர்' என்னும் படம் சிறந்த படமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு 'சாதனை விருது' அளிக்கப்பட்டுள்ளது. இதனை இயக்கியவர் சதீஷ் குருவப்பன் (40). மதுரை அனுப்பானடியைச் சேர்ந்த இவர், இதுவரை 17 குறும்படங்களை இயக்கியுள்ளார். மனிதநேயத்தையும், சமூகப் பிரச்சனைகளையும் மையமாகக் கொண்டவை இவரது பல குறும்படங்கள்.
தற்போது விருது பெற்றிருக்கும் 'மிஸ்டர் காப்ளர்' குறும்படம், செருப்புத் தைக்கும் தொழிலாளியாக இருந்தாலும் அவருக்குரிய மரியாதையைத் தரவேண்டும் என்ற கருத்தை மையமாகக் கொண்டது. 2017ல் வெளியான இக்குறும்படத்தை இதுவரை உலக அளவில் 20 கோடி பேர் பார்த்துள்ளனர். இப்படம், ஏற்கனவே 'சாம்பியன்ஸ் ஆஃப் தி யுனிவர்சல்', 'அச்சீவர்ஸ் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ்', 'ஃப்யூச்சர் கலாம் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ்' போன்ற விருதுகளைப் பெற்றுள்ளது. அந்த வரிசையில் மற்றுமொரு சிறப்பாக அமெரிக்காவின் எல்.டி.யு.இ. (LTUE) அமைப்பு நடத்திய சர்வதேசத் திரைப்பட விழாவில் விருது பெற்றுள்ளது. |
|
|
|
|
More
தெரியுமா?: 'லக்ஷ்மி - நினைவில் நின்ற உணவுக் குறிப்பு' - வீடியோ போட்டி தெரியுமா?: இந்திய அரசின் 'நாரீ சக்தி புரஸ்கார்' தெரியுமா?: இலக்கிய மாமணி விருது செவாலியே விருது தமிழன் விருது
|
|
|
|
|
|
|