கிளீவ்லாந்தில் தியாகராஜ ஆராதனை! காதில் விழுந்தது ...... கர்நாடக இசை ஒலிபரப்பு
|
|
|
அரசுக்கு வருமானம் ஈட்டுவதில் மிகக் குறியாக இருக்கிறார் மத்திய நிதி அமைச்சர் ப. சிதம்பரம். எனவே, மத்திய நிதித்திட்ட அறிவிப்புக்குமுன் மிகவும் வலுவாக எதிர்பார்க்கப்பட்டவற்றில் ஒன்று, NRI எனப்படும் வெளிநாடுவாழ் இந்தியர்கள் இந்திய வங்கிகளில் வைத்திருக்கும் நிதிகளின் மீது கிடைக்கும் வட்டியின் பேரில் வருமான வரி விதிக்கப்படும் என்பதாகும்.
ஆனால் ·பெப்ருவரி 28ஆம் நாள் ப. சிதம்பரம் அந்த அச்சத்தை நீக்கினார். "பல பாராளுமன்ற நண்பர்கள் கேட்டுக் கொண்டதற்கிணங்க, இந்த ஆண்டு நான் NRI கணக்குகளில் பெறும் வட்டியின் மேல் வரி விதிக்கவில்லை" என்று அறிவித்தார்.
ஏராளமான சுங்க மற்றும் கலால் வரிகளையும் குறைத்ததோடு, தனிநபர் வருமான வரி வரம்புகளையும் உயர்த்தியுள்ள நிதித்திட்டம் பரவலான வரவேற்பைப் பெற்றாலும், அரசுக்கு வருவாய் எங்கிருந்து அதிகரிக்கும் என்ற கேள்வியை விவரமறிந்தோரிடையே எழுப்பியுள்ளது. |
|
எஸ். கிருஷ்ணமூர்த்தி |
|
|
More
கிளீவ்லாந்தில் தியாகராஜ ஆராதனை! காதில் விழுந்தது ...... கர்நாடக இசை ஒலிபரப்பு
|
|
|
|
|
|
|