கிளீவ்லாந்தில் தியாகராஜ ஆராதனை! காதில் விழுந்தது ...... வட்டி வருமானத்துக்கு வரி இல்ல
|
|
கர்நாடக இசை ஒலிபரப்பு |
|
- |மார்ச் 2005| |
|
|
|
ஒவ்வொரு மாதமும் மூன்றாம் சனிக்கிழமை மாலை 6:00 முதல் 7:30 மணி வரை சான்டா கிளாராவில் உள்ள KKUP Cupertino (91.5 FM) வானொலி நிலையத்திலிருந்து கர்நாடக சங்கீத நிகழ்ச்சிகள் ஒலிபரப்பப்படுகின்றன. கடந்த 32 வருடங்களாக, பொதுமக்களின் உதவியால் மட்டுமே, பலவகை நிகழ்ச்சிகளை ஒலிபரப்பி வருகிறது இச்சேவை.
வர்ணம், விநாயகர் பாடல் எனத் தொடங்கி, முக்கிய நிகழ்ச்சியாக ஆலாபனையுடன் பாடலும், இறுதியில் துக்கடா, தில்லானா என ஒரு கச்சேரியைப் போல இந்நிகழ்ச்சி வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனைத் தொகுத்து வழங்குகிற கிருஷ்ணமூர்த்தியை maruvurtn@yahoo.com" என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம். வளைகுடாப் பகுதிச் சங்கீத வித்வான்களூம் அவர்களுடைய மாணவர்களும் நேர்முகப் பேட்டியிலும் சிறப்பு வழங்குனராகவும் கலந்து கொள்வதுண்டு. |
|
மார்ச் மாத நிகழ்ச்சியில் செம்மங்குடி ஸ்ரீனிவாச அய்யர், நேதனூரி கிருஷ்ணமூர்த்தி, M.L.வசந்தகுமாரி ஆகியோரின் பாடல்கள் ஒலிபரப்பப்படும். |
|
|
More
கிளீவ்லாந்தில் தியாகராஜ ஆராதனை! காதில் விழுந்தது ...... வட்டி வருமானத்துக்கு வரி இல்ல
|
|
|
|
|
|
|