கிளீவ்லாந்தில் தியாகராஜ ஆராதனை! கர்நாடக இசை ஒலிபரப்பு வட்டி வருமானத்துக்கு வரி இல்ல
|
|
|
தன் பொறுப்பற்ற கடந்த காலத்தைப் பற்றி நிருபர்கள் கேட்பார்களே என்பதற்கு, அதிபர் புஷ் சொன்னார்: "இது நான் வழக்கமா உடற உடான்ஸ்தான். தோ பாரு, நாம எல்லாருமே தப்பு பண்ணிருக்கோம், என்னா? என்ன தப்பு பண்ணோங்கிறதைப் பத்திப் பேசக்கூடாது, என்ன பாடம் கத்துக்கிட்டோங்கிறதைப் பத்திப் பேசணும். ஆமா, நான் பாவம் பண்ணேன், பின்னால திருந்திட்டேன்!"
அதிபர் புஷ்ஷின் நண்பர் வீட், ஆகஸ்ட் 1998ல் செய்த ரகசிய ஒலிப்பதிவுகளில்.
*****
சிகாகோவைச் சேர்ந்த ஆலிசன் மில்லரும், டாட் பாரிஷ¤ம் வேண்டியதெல்லாம் ஒரு குழந்தைதான். ஆனால், என்றாவது ஒரு நாள் தங்கள் குழந்தையாகப் பிறக்கும் என்று நம்பி சோதனைக் குழாயில் உருவாக்கிய அவர்கள் கருவை மருத்துவமனைப் பணியாளர் ஒருவர் பாதுகாக்கத் தவறி விட்டார். வேதனையடைந்த மில்லரும் பாரிஷ¤ம் மருத்துவமனை மேல் தங்கள் குழந்தையைக் கொன்றதாகக் குற்றம் சாட்டி வழக்குத் தொடர்ந்தனர்.
சோதனைக் குழாய்க் கருவும் உயிருள்ள மனிதப் பிறவிதான் என்று தீர்ப்பளித்து வழக்கு தொடர அனுமதித்தார் குக் மாவட்ட நீதிபதி ஜெ·ப்ரி லாரன்ஸ். இந்தத் தீர்ப்பு சோதனைக் குழாய் மூலம் கருத்தரிக்க உதவும் மருத்துவமனைகளை இடியெனத் தாக்கியிருக்கிறது.
அசோசியேட்டட் பிரஸ், ·பெப்ருவரி 8, 2005.
*****
ஏய்ன் ரேண்ட் பிறந்த நூறு ஆண்டுகளுக்குப் பின்னரும், அவர் மறைந்து 25 ஆண்டுகள் கழித்தும், புரிபடாத ஆனால் இனம் புரியாத வசீகரத் தன்மை கொண்டவராக விளங்குகிறார். அமெரிக்க அஞ்சலகத்தின் தபால் தலை வெளியீடு, சி-ஸ்பான் அமெரிக்க எழுத்தாளர் வரிசை என்ற பல சிறப்புகளால் அவர் பொது நீரோட்டத்தாலும் ஏற்கப்பட்டு விட்டார். வாசகர்கள் வரிசைப் படுத்தும் இருபதாம் நூற்றாண்டின் தலை சிறந்த நூல் வரிசையில் அவரது நூல்கள் முக்கிய இடம் வகிக்கின்றன. மாதமொரு நூல் சங்கத்தின் வாசகர்கள் தங்கள் வாழ்க்கையில் திருப்பத்தை உண்டாக்கிய நூல்கள் என்று வரிசைப் படுத்திய பட்டியலில் பைபிளுக்கு மிகப் பின் தங்கிய அடுத்த இடத்தை ரேண்டின் "அட்லாஸ் ஷ்ரக்கடு" (Atlas Shrugged) கைப்பற்றியது. பழுத்த நாத்திக ரான ரேண்ட் அதை அவமானம் என்று கருதிக் கூனிக்குறுகியிருப்பார்.
ரீசன் மேகசின், மார்ச் 2005, ஏய்ன் ரேண்ட் நூற்றாண்டுச் சிறப்பிதழில்
*****
ஆப்கானிஸ்தானின் அழிவு, முஸ்லிம் நாட்டின் இதயத்தில் பாலித்தீவில் நடக்கும் புறமத வாழ்க்கை, காஷ்மீரில் மனித உரிமை மறுப்பு, குஜராத் அட்டூழியம், அமெரிக்க வெளியுறவுத்துறையின் பாக்கிஸ்தான் கைப்பற்றல், இராக்கில் அமெரிக்க-ஆங்கில ராணுவம் விளைக்கும் பேரழிவு, பாலஸ் தீனத்தில் இஸ்ரேலின் கொடுங்கோன்மை, மத்திய கிழக்கு ஆட்சியாளர்களின் அத்துமீறல், சிரியா, எகிப்து, லிபியா, டுனீசியாவில் கொடுங்கோலாட்சி, சோமா லியாவில் வெறியாட்டம், இவையெல்லாம் போதுமே, கடவுள் சுனாமியை அனுப்பி மக்களை எச்சரிக்க.
ஷமீம் சித்திக்கி, முஸ்லிம்ஸ் வீக்லி.
*****
70 மில்லியன் இசைத்தட்டுகளை விற்ற இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமான் இந்திய மரபிசை மறைந்து விடுமோ எனக் கவலை தெரிவித்துள்ளார். "புத்தம்புது தினுசுகளை விரும்புவோரை என்னுடைய இசைத் தட்டுகள் ஈர்க்க வேண்டும் என்று விரும்பினேன்.
இந்திய மரபிசை ஹிப்ஹாப், ·பங்க் இசையோடு கலந்து பல தினுசான அவ தாரங்களை எடுத்திருக்கிறது. ஆனால், தற்கால இசை பல வரம்புகளை மீறி புரிந்து கொள்ளவே முடியாத நிலையை எட்டி விட்டது. இப்போது அது இந்திய மரபுக்கு மீள வேண்டும். நம் அடிப்படைக்கு வந்து நல்ல காதுக்கினிய இசையைக் கேட்க வேண்டும் என்ற எண்ணம் எழுகிறது" என்கிறார் ரகுமான். அது சரிதான், ஆனால், பெற்றோர் தாம் எது சரி தவறு என்று வரையறுக்க வேண்டும் என்கிறார் ஷோபா டே. நம் பண்பாட்டின் சிறந்தவற்றை, நம் உடைகளை, நம் பண்டிகைகளை விடாப்பிடியாகப் பிடித்துக் கொள்கிறேன். அமெரிக்காவிடமிருந்து எதை எதையெல்லாம் எடுத்துக் கொள்ளலாம், ஆனால் நம் பண்பாட்டைப் பற்றியும் பெருமை கொள்ளலாம் என்பதை இளைய தலைமுறைக்குச் சொல்லிக் கொடுக்கத் தவறி விட்டோம்" என்று ஷோபா வருந்துகிறார். |
|
பிபிசி வானொலி
*****
ரோபாட் படைகளை வைத்து அயல்நாட்டு மனிதர்களைக் கொல்வது எளிதாக, மலிவாக, செயல்திறனுடன் இருக்கும் என்பதில் ஐயமில்லை. வரலாறு ஒன்றைத் தெளிவாகக் காட்டுகிறது. எப்போதெல்லாம் ஒரு சமுதாயம் மற்றவர்களை எளிதாக, மலிவாக, செயல்திறனுடன் கொன்று அவர்களிடமிருந்து தான் விரும்பியதை எடுத்துக் கொள்ளும் தொழில்நுட்ப வளர்ச்சியை அடைகிறதோ, அது அந்த நுட்பத்தைப் பயன்படுத்தத் தவறுவதில்லை. போரின் செலவு அதிகமாக இருக்க வேண்டும். போரால் வலியும் பெருந்துன்பமும் வர வேண்டும். போரிடும் நாடுகள் தங்கள் இரத்தத்தையும், செல்வத்தையும் இழக்க நேரிட வேண்டும். அதையும் மீறிப் போருக்குத் தேவையான காரணம் இருந்தாலொழியப் போரிடுவது அதர்மம். அதனால், போரிடுவதை எளிதாக்குவதைத் தர்மம் எனக் கருத முடியாது.
டிம் மெக்எல்கன், ஆசிரியருக்குக் கடிதங்கள், நியூ யார்க் டைம்ஸ்.
*****
(மறைந்த ஆங்கிலேயப் பிரதமர்) வின்ஸ்டன் சர்ச்சிலின் தாள் பணியும் பக்திக்கு ஒரு காரணம் அரசியல் ஞானி லியோ ஸ்ட்ரௌஸ். நாஜி ஜெர்மனியிலிருந்து இங்கிலாந்துக்குத் தப்பி ஓடிப் பின்னர் அமெரிக்காவில் அடைக்கலம் புகுந்த இவர் கிரிஸ்டல், ஹிம்மல்·பார்ப் போன்ற பல நவப் பழமை வாதிகளை உருவாக்கியவர். இவர் மேற்கத்தியக் குடியாட்சிகளுக்கு, அடித்தட்டு மக்க ளிடையே நிலவும் ஆபத்தான வெறித்தனத்தைக் கட்டுப்படுத்த அறிவுசார் மேட்டுநிலைக் குடிகள் தேவை என்றார். முதல் உலகப் போருக்கு முந்தைய ஆங்கிலப் பிரபுக்கள், பிளேட்டோ உருவகித்த நாட்டுக்காவலர்களாக நிலவினார்கள் என்பது இவர் கருத்து. சர்ச்சிலின் மறைவின்போது அரசியல் மேன்மை, மனித மேன்மை, மனித ஆற்றலின் உச்சி நிலையை நாமும் நினைவு கூர்ந்து, நம் சீடர்களுக்கும் நினைவூட்டுவதை விடத் தேவையான கடமையேதும் இல்லை என்றார். சர்ச்சிலைக் கொண்டாடுவோர் உடனே அடுத்த அடியெடுத்து வைத்து ஏகாதிபத்தியத்தையும் வலியுறுத்தத் தொடங்கிவிடுகிறார்கள். அங்கேதான் சிக்கலே!
ஜேக்கப் ஹைல்ப்ரன், லாஸ் ஏஞ்சலஸ் டைம்ஸ் தலையங்க ஆசிரியர், நியூ யார்க் டைம்ஸ் நூல் விமரிசனக் கட்டுரையில்
நெடுஞ்செவியன் |
|
|
More
கிளீவ்லாந்தில் தியாகராஜ ஆராதனை! கர்நாடக இசை ஒலிபரப்பு வட்டி வருமானத்துக்கு வரி இல்ல
|
|
|
|
|
|
|