கார வடை
|
|
|
|
தேவையான பொருட்கள் அரிசி உடைசல் - 2 கிண்ணம் துவரம்பருப்பு - 1/2 கிண்ணம் கடலைப்பருப்பு - 1/2 கிண்ணம் உளுத்தம்பருப்பு - 1/2 கிண்ணம் காராமணி - 1/2 கிண்ணம் தேங்காய்த் துருவல் - 1/2 கிண்ணம் இஞ்சி - 1 துண்டு பச்சை மிளகாய் - 3 சோம்பு - 1 தேக்கரண்டி கறிவேப்பிலை, கொத்துமல்லி (நறுக்கியது) - 1/2 கிண்ணம் வெங்காயம் (பொடியாக நறுக்கியது) - 1 கிண்ணம் கடுகு - 1 தேக்கரண்டி உளுத்தம் பருப்பு - 1 தேக்கரண்டி கடலைப்பருப்பு - 1 தேக்கரண்டி மிளகாய் வற்றல் - 3 பெருங்காயம் - சிறிதளவு உப்பு - தேவைக்கேற்ப எண்ணெய் - 1/2 கிண்ணம்
செய்முறை அரிசி உடைசலில், மூன்று பருப்புகளை ஊற விட்டு, காராமணியையும் ஊற விட்டு, இஞ்சி, சோம்பு, பச்சை மிளகாய் சேர்த்துக் கொரகொரப்பாக அரைக்கவும். அதில் உப்பு சேர்த்து வைக்கவும். கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு, மிளகாய் வற்றல். பெருங்காயம் இவற்றைத் தாளித்து, வெங்காயம் சேர்த்து, தேங்காய்த் துருவல் போட்டு வதக்கவும். பாதி வதங்கியதும் கலந்து வைத்துள்ள மாவில் கொட்டி, கறிவேப்பிலை கொத்துமல்லியும் போட்டு நன்றாகக் கலக்கவும். தோசைக் கல்லில் கரண்டியால் சின்னச் சின்னதாக அடை செய்யவும். சுற்றிலும் எண்ணெய் ஊற்றி இரண்டு புறமும் சிவந்தவுடன் எடுத்து வைத்து தேங்காய் சட்னி, வெங்காயச் சட்னியுடன் சாப்பிட்டால் ருசியோ ருசி. |
|
அமரர் தங்கம் ராமசாமி, பிரிட்ஜ் வாட்டர், நியூ ஜெர்சி |
|
|
More
கார வடை
|
|
|
|
|
|
|