இனிப்புப் பச்சடிகள் பலாப்பழப் பச்சடி விளாம்பழப் பச்சடி வெண்டைக்காய் வெல்லப் பச்சடி பீட்ரூட் பச்சடி இலந்தைப் பழ பச்சடி நார்த்தங்காய்ப் பச்சடி மிக்ஸட் ·ப்ரூட் பச்சடி
|
|
|
தேவையான பொருட்கள்
வேப்பம்பூ - 2 மேசைக்கரண்டி புளி - 1 சிறிய எலுமிச்சை பழம் அளவு வெல்லம் - 1 கிண்ணம் உப்பு - 1 தேக்கரண்டி கடுகு - 1 தேக்கரண்டி மிளகாய் வற்றல் - 1 எண்ணெய் - சிறிதளவு
செய்முறை
வாணலியில் எண்ணெய் விட்டு, வேப்பம் பூவைப் பொன்னிறமாக வறுத்துப் பொடி செய்து கொள்ளவும்.
புளியை நன்றாகக் கரைத்து உப்புப் போட்டு, கொதிக்க வைத்து, வெல்லம் சேர்க்கவும்.
நன்கு கொதித்தவுடன் பொடி செய்த வேப்பம்பூவைப் போட்டு ஒரு கொதிவிட்டு இறக்கவும்.
நீர்க்க இருந்தால் 1 தேக்கரண்டி அரிசி மாவு கரைத்துவிட்டுக் கொதிக்க வைக்கவும்.
பிறகு கடுகு, மிளகாய் வற்றல் தாளிக்கவும். |
|
குறிப்பு: வருடப் பிறப்பிற்கு நம் வீடுகளில் பச்சை வேப்பம்பூவில் பச்சடி செய்வார்கள். மற்ற நாட்களில் காய்ந்தபூவில் செய்வது உண்டு. சிலர் மாங்காய்ப்பச்சடியில் வேப்பம்பூவைப் பொடி செய்து போட்டு கொள்வார்கள்.
தங்கம் ராமசாமி |
|
|
More
இனிப்புப் பச்சடிகள் பலாப்பழப் பச்சடி விளாம்பழப் பச்சடி வெண்டைக்காய் வெல்லப் பச்சடி பீட்ரூட் பச்சடி இலந்தைப் பழ பச்சடி நார்த்தங்காய்ப் பச்சடி மிக்ஸட் ·ப்ரூட் பச்சடி
|
|
|
|
|
|
|