இசைக்குயிலுக்கு ஓர் அஞ்சலி! நிருத்யாஞ்சலியின் மூன்றாவது ஆண்டுவிழா ரம்யா வைத்யநாதனின் நடன அரங்கேற்றம் சிகாகோவில் பெண்கள் புற்றுநோய் விழிப்புணர்ச்சி நாடக விமர்சனம்: ஸ்ருதி பேதம்
|
|
|
மார்ச் 5, 2005 அன்று மில்பிடாஸ் நூல்நிலைய அரங்கத்தில் தமிழ்மன்றத்தின் சார்பாக முனைவர். சுவாமிநாதன், தமிழ் எழுத்துக்களின் தோற்றமும் வளர்ச்சியும் குறித்து 'எழுத்து வளர்ந்த கதை' என்ற தலைப்பில் உரையாற்றினார். தமிழ் பிராமி எழுத்துக்கள் தோன்றி, அவை எவ்வாறு காலந்தோறும் மாறுதலடைந்து தற்காலத்தில் புழங்கும் எழுத்துக்களாக உருமாறின என்ற வரலாற்றைச் சுவையாகச் சித்தரித்தார். தமிழ் பிராமி எழுத்துக்கள் மட்டுமின்றி, உலகத் தின் நாகரிகத் தொட்டில்களான பிற முக்கியமான ஐந்து மொழிகளின் எழுத்துக் கள் தோன்றி, வளர்ந்த விதத்தை அருமையான புகைப் படங்கள், பட்டியல்கள் ஆகியவற்றின் துணையோடு ஒரு பவர் பாய்ண்ட் காட்சியளிப்பாகக் காட்டினார். உலகத்தின் தொன்மையான மொழிகளாகிய சீனம், பாரசீகம், அரபி போன்ற மொழி களிலும் எவ்வாறு எழுத்துக்கள் தோன்றி அவை தற்போதைய நிலையை அடைந்தன என்பதை விளக்கினார். முதன் முதலில் இயற்கைக் குறியீடுகளையே மனிதன் எழுத்துக்களாகப் பரிமாறிவந்தான் என்பதை மெசபடோமியாவிலும், மெக்சிகோவிலும் உருவான தொன்மையான எழுத்துருக் களைக் காட்டி விளக்கினார்.
அரபி மொழியில் உள்ள எழுத்துக்கள் எவ்வாறு மிகுந்த கலைநயத்துடன் ஓர் ஓவியம் போல் எழுதப்படுகின்றன என்பதையும், சீனர்கள் எழுதும் பொழுது எவ்வாறு சூழ்நிலையையும் கணக்கில் எடுத்துக் கொள்கிறார்கள் என்று விளக்கியது பிரமிப்பை ஏற்படுத்தியது. பிராமி எழுத்துக்கள் முதலில் கிரந்த மொழியை எழுதுவதற்கே உருவாக்கப்பட்டாலும், தமிழில் எழுதுவதற்காக தனியான ஒரு பிராமி பயன்படுத்தப்பட்டதின் அவசியம் குறித்து விளக்கினார்.
பயனுள்ள, சுவாரசியமான இந்த ஆராய்ச்சி உரை, பார்வையாளர்களிடம் மொழி குறித்தும் எழுத்துக் குறித்தும் மிகுந்த ஆர்வத்தைத் தூண்டியது. பேராசியர் சுவாமிநாதன், அஜந்தா மற்றும் சித்தன்ன வாசல் ஓவியங்கள். கர்நாடக இசையில் இயற்பியல், போன்ற பிற துறைகள் குறித்தும் அடுத்த இரு மாதங்களில் சொற்பொழிவாற்ற இருக்கிறார். |
|
ராஜன் சடகோபன் |
|
|
More
இசைக்குயிலுக்கு ஓர் அஞ்சலி! நிருத்யாஞ்சலியின் மூன்றாவது ஆண்டுவிழா ரம்யா வைத்யநாதனின் நடன அரங்கேற்றம் சிகாகோவில் பெண்கள் புற்றுநோய் விழிப்புணர்ச்சி நாடக விமர்சனம்: ஸ்ருதி பேதம்
|
|
|
|
|
|
|