Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
April 2005 Issue
ஆசிரியர் பக்கம் | நேர்காணல் | மாயாபஜார் | இலக்கியம் | முன்னோடி | அன்புள்ள சிநேகிதியே | நலம்வாழ | நூல் அறிமுகம் | அஞ்சலி
குறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | புதிரா? புரியுமா? | சமயம் | வார்த்தை சிறகினிலே | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | தமிழக அரசியல் | புழக்கடைப்பக்கம்
நடந்தவை
Tamil Unicode / English Search
நிகழ்வுகள்
மந்திர யோகம்
வளைகுடாப் பகுதித் தமிழ்மன்றம்: சித்திரைக் கொண்டாட்டம் 2005
செல்வி லக்ஷ்மி வெங்கடேசனின் பரதநாட்டிய அரங்கேற்றம்
மாதா அமிர்தானந்தமயி மையத்தின் சுனாமி நிவாரண நிதி இசை நிகழ்ச்சி
- சூப்பர் சுதாகர்|ஏப்ரல் 2005|
Share:
Click Here Enlargeஏப்ரல் 10, 2005 அன்று மதியம் 2 மணி முதல் 6 மணி வரை, 'இசைப் பேரொளி' நெய்வேலி சந்தானகோபாலனின் இசை நிகழ்ச்சி ஒன்றை மாதா அமிர்தானந்தமயி தலைமை மையம் (M.A. Center) ஏற்பாடு செய்துள்ளது. கலிபோர்னியா வளைகுடாப் பகுதியின் சான் ரமோனில் உள்ள இந்த மையம், அம்மாவின் சுனாமி நிவாரணப் பணிகளுக்கு உதவும் வகையில் பல நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றது.

'அம்மா' என்று பாசத்துடன் அழைக்கப்படும் ஸ்ரீ மாதா அமிர்தானந்தமயி தேவி தம்மை நாடிவரும் அன்பர்களுக்கு சத்குருவாகவும், அன்னையாகவும் திகழ்கிறார். இவரை 'அரவணைக்கும் மகான்' (Hugging Saint) என்றும் அழைக்கிறார்கள்.

நெய்வேலி சந்தானகோபாலன், மதுரை டி.என். சேஷகோபாலனிடம் இசை பயின்றவர். இந்த நிகழ்ச்சியில் ஹேம்மிகே ஸ்ரீவத்சன் (வயலின்), ஸ்ரீராம் பிரம்மானந்தம் (மிருதங்கம்) தவிர ஹேமா சிச்தா, ஸ்ரீகாந்த் சாரி, அகிலேஷ் சிச்தா, அரவிந்த் லக்ஷ்மிகாந்தன் ஆகியோரும் பங்கேற்கிறார்கள். இந்த நிகழ்ச்சியின் மூலம் திரட்டப்படும் நிதி, மாதா அமிர்தானந்தமயி மையத்தின் சுனாமி நிவாரணப் பணிகளுக்குப் பயன்படுத்தப்படும்.

ஜனவரி 3-ம் தேதி வீசிய ஆழிப் பேரலையால் பாதிக்கப்பட்ட தமிழகம் உள்பட தென்மாநிலங்களில் நிவாரணம் மற்றும் மறுவாழ்வுப் பணிகளுக்காக, மாதா அமிர்தானந்தமயி ஆசிரமம் 100 கோடி ரூபாய் (சுமார் 23 மில்லியன் அமெரிக்க டாலர்) நிதி உதவி அளிக்கப்படும் என்று அறிவித்தது.

இதுவரை செய்யப்பட்ட சுனாமி நிவாரணப் பணிகளில் சில: கேரளத்தில் கொல்லம், எர்ணாகுளம், ஆலப்புழை, தமிழகத்தில் நாகப்பட்டினம் மாவட்டத்தின் சமதம்பேட்டை, பட்டினச் சேரி, அக்கரைப்பேட்டை கிராமங்கள், சென்னை, கடலூர், கன்னியாகுமாரி, காரைக்கால், அந்தமான்-நிக்கோபார் தீவுகள், இலங்கை ஆகிய இடங்களில் பாதிக்கப்பட்டவர்களுக்குத் தற்காலிக, மற்றும் நிரந்தர வீடுகள் கட்டித்தரப் படுகின்றன.

பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு இது வரை ஒரு கோடி உடனடி நிவாரணத் தொகையாகக் கொடுக்கப்பட்டுள்ளது.

ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர் களுக்கு இலவசக் கல்வி மற்றும் தொழில் பயிற்சி

உணவு, உடை மற்றும் மருத்துவ உதவிகள்

நாகப்பட்டினத்தில் ஆதரவற்ற குழந்தை களுக்கான காப்பகம்

அம்மாவின் சுனாமி நிவாரணப் பணிகள் பற்றி மேலும் அறிய: www.amritapuri.org/tsunami

மேலும் விபரங்களுக்கு: www.amma.org/bayarea/ns/
நிகழ்ச்சி:
நெய்வேலி சந்தானகோபாலன் கச்சேரி
நாள்: ஏப்ரல் 10, 2005 (ஞாயிறு)
நேரம்: மதியம் 2:00 மணி முதல்
6:00 மணி வரை
இடம்: M.A. Center, சான் ரமோன்
நுழைவுச்சீட்டு: $20 (பெரியவர்),
$12 (6-12 வயதுள்ளோர்),
5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு அனுமதி இலவசம்
நன்கொடை மற்றும் நுழைவுச்சீட்டுக்கு: சீதா ரமேஷ்பாபு: 925.551.8638
குழந்தைகள் பராமரிப்பு (Child care) வசதி உண்டு

சூப்பர் சுதாகர்
More

மந்திர யோகம்
வளைகுடாப் பகுதித் தமிழ்மன்றம்: சித்திரைக் கொண்டாட்டம் 2005
செல்வி லக்ஷ்மி வெங்கடேசனின் பரதநாட்டிய அரங்கேற்றம்
Share: 




© Copyright 2020 Tamilonline