|
உண்மையான பக்தன் யார்? |
|
- |ஏப்ரல் 2020| |
|
|
|
|
பெரிய பண்டிதர் ஒருவரின் கீதை உபன்யாசத்தைக் கேட்டுக்கொண்டிருந்த பாமரனைப் பற்றிய கதை இது. பண்டிதரின் மேதமைமிக்க விமர்சனங்களும், ஒவ்வொரு சொல்லுக்கும் அவர் கூறிய விளக்கங்களும் எல்லோரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தின. அவர் கூறிய எதுவும் பாமரனின் தலைக்குள் நுழையாதபோதும் அவன் மிகக் கவனமாகக் கேட்பதுபோலத்தான் இருந்தது, ஏனென்றால் அவன் விடாமல் கண்ணீர் சிந்தியவண்ணம் இருந்தான்!
"ஏன் அழுகிறாய்?" என்று கடைசியில் பண்டிதர் கேட்டபோது, அவன் கூறிய பதிலில் இருந்த சிரத்தையும் பக்தியும் எல்லோரையும் வியக்க வைத்தது. ரதத்தில் தேரோட்டியாக உட்கார்ந்துகொண்டு, நெடுநேரம் பின்புறம் கழுத்தைப் பாதி திருப்பி வைத்துக்கொண்டு, மந்தபுத்தி கொண்ட அர்ஜுனனுக்குப் புரியவைத்த பகவானின் சிரமத்தை நினைத்துப் பார்த்து அழுததாக அவன் கூறினான். "அவருடைய கழுத்து எவ்வளவு வலித்திருக்கும்?" என்று கேட்டு விசும்பினான் அவன். |
|
இதுதான் உண்மையான பக்தி, ஆன்மீக வெற்றிக்கு நிச்சயமான நுழைவுச்சீட்டு இது. அவன் புராணப் பாத்திரங்களோடு ஒன்றிப் போய்விட்டதனால், அவனுக்கு அந்தக் காட்சி உயிர்த்தெழுந்து கண்முன் தோன்றியது.
நன்றி: சனாதன சாரதி, மே 2019
பகவான் ஸ்ரீ சத்திய சாயிபாபா |
|
|
|
|
|
|
|