|
பிரார்த்தனை இதயத்திலிருந்து எழவேண்டும் |
|
- |மார்ச் 2020| |
|
|
|
|
பத்ராசல ராமதாசருக்கு என்ன நடந்தது என்று கேளுங்கள். ஸ்ரீராமர் கோவிலைப் புனர்நிர்மாணம் செய்வதற்காக அரசுப் பணத்தைச் செலவிட்டதற்காக ராமதாசரை கோல்கொண்டா நவாப் சிறையிலடைத்துவிட்டார். அந்தப் பணத்தைத் திரும்பச் செலுத்தி ராம, லக்ஷ்மணர்களே அவருக்கு விடுதலை வாங்கிக்கொடுத்தனர்.
ராமதாசரிடம் ஓலைச்சுவடிகளின் குவியல் ஒன்று இருந்தது. அவற்றில் அவர் எழுத்தாணியால் ராமரைப்பற்றிப் பாடல்கள் எழுதியிருந்தார். அந்தக் குவியலை ஒருநாள் பார்த்தபோது அவர் மனதில், "இந்தப் பாடல்களை நான் என் சந்தோஷத்துக்காக எழுதினேனா, இல்லை ராமரை மகிழ்விக்கவா?" என்ற கேள்வி எழுந்தது. அவற்றில் எவை ராமரை மகிழ்வித்தன என்று அறியவும் மற்றவற்றைத் தூக்கி எறியவும் அவர் விரும்பினார். தமக்குப் பிடித்ததை ராமரே காப்பாற்றட்டும் என்று எண்ணி எல்லாச் சுவடிகளையும் கோதாவரி நதியில் வீசிவிட்டார். கிட்டத்தட்ட எல்லாமே நீரில் மூழ்கிப்போயின. அவற்றில் 108 மட்டுமே மிதந்தன. அவை மீட்கப்பட்டன.
அவை மட்டுமே இதயத்திலிருந்து எழுந்தவை. சமத்காரம், செயற்கைத்தன்மை, பண்டிதத்தனம், மேதாவித்தனம் ஆகியவை மற்றவற்றில் தூக்கலாக இருந்தன. பிரார்த்தனை என்பது கடவுளின் வசிப்பிடமாகிய இதயத்திலிருந்து எழவேண்டுமே அல்லாது, கோட்பாடுகளும் ஐயங்களும் மோதிக்கொள்ளும் மூளையிலிருந்து எழலாகாது. |
|
பகவான் ஸ்ரீ சத்திய சாயிபாபா |
|
|
|
|
|
|
|