'ஸ்கந்தா' நாட்டிய நாடகம். கர்நாடக சங்கீதப் பெருவிழா 2020
|
|
|
|
ஏப்ரல் 11, 2020 மதியம் 1.30 மணிக்கும், மாலை 5.30 மணிக்கும் இரண்டு காட்சிகளாக, சான் ஹோசே எவர்கிரீன் வேலி உயர்நிலைப்பள்ளி அரங்கில் (3300 Quimby Road, San Jose, CA) 'ரமண மகரிஷி' தமிழ் நாடகம் நடக்க இருக்கிறது. ரமணரின் வாழ்க்கைச் சரித்திரம் மற்றும் போதனைகளைச் சித்திரிக்கும் இந்த நாடகம் கேன்சர் இன்ஸ்டிட்யூட் ஃபவுண்டேஷனுக்கு நிதி திரட்டும் பொருட்டு, அபிராமி கலைக்குழுவினரால் வழங்கப்படுகிறது.
கேன்சர் இன்ஸ்டிட்யூட் ஃபவுண்டேஷன் சென்னையிலுள்ள அடையாறு கேன்சர் மையத்துக்கு நிதியுதவும் அமைப்பாகும். இவர்கள் தமிழகமெங்கும் ஒவ்வொரு மாவட்டத்திலும் புற்றுநோய் முன்னாய்வு மையங்களை அமைத்து வருகிறார்கள். இந்த நாடகத்தின் வருவாய் முழுவதும் திருவண்ணமலை மையத்திற்கு நன்கொடையாக வழங்கப்படும்.
அபிராமி கலைக்குழு ஏற்கனவே விரிகுடாப் பகுதியில் 'பொன்னியின் செல்வன்', 'சிவகாமியின் சபதம்' போன்ற மிக வெற்றிகரமான நாடகங்களை வழங்கிப் புகழ்பெற்ற குழுவாகும்.
தமிழ் நாடகவுலகில் பிரபலமாக விளங்கும் திரு பாம்பே சாணக்யா இந்த நாடகத்தை எழுதி இருக்கிறார். திருமதி பாகீரதி சேஷப்பன் இயக்கத்தில், திரு வேணு சுப்ரமண்யத்தின் உதவி இயக்கத்தில் நாடகம் உருவாகி வருகிறது. திரு வேதாந்த பரத்வாஜ் இசை, திரு ஸ்ரீதரன் மைனர் வழங்கும் நேரடி இசை, திருமதி நித்யவதி சுந்தரேஷ் மேடையைமைப்பு, திருமதி.விஜி ஸ்ரீராமன் உடையலங்காரம் என மிகச்சிறப்பாக எல்லாம் தயாராகி வருகின்றன. திரு ஸ்ரீராமன், திரு ராம் ராமச்சந்திரன், செல்வி வசந்தி, திருமதி சுஜாதா கோபால் ஆகியோர் முக்கியப் பாத்திரங்கள் ஏற்கிறார்கள்.
இந்த நாடகத்திற்கு சின்மயா மிஷன் தலைமை ஆசார்யர் சுவாமி ஈஸ்வரானந்தா சிறப்பு விருந்தினராக வருகைதர இருக்கிறார். மேலும் இந்நாடகம் லாஸ் ஏஞ்சலஸ் நகரின் சின்மயா அரங்கில் ஏப்ரல் 18ம் தேதி மாலை 5.30 மணிக்கு அரங்கேற இருக்கிறது. விரிகுடாப் பகுதி அபிராமி கலைக்குழுவினர், லாஸ் ஏஞ்சலஸின் திருமதி ஹேமா ரவிக்குமார் குழுவினருடன் இணைந்து நிகழ்ச்சியை வழங்குவார்கள்.
ஒரு அற்புதமான மகானின் வாழ்க்கை மற்றும் உபதேசங்களை அறிவதோடு, புற்றுநோய் முன்னாய்வுக்கு நிதி வழங்க இதுவொரு அரிய வாய்ப்பு.
நுழைவுக் கட்டணம் - $25.
ஆன்லைனில் சீட்டு வாங்க: www.cifwia.org
தொடர்புகொள்ள: பிரபா: 408-537-3458 கார்த்திக் 510-396-3091 பாகி: 510-516-9861 |
|
பாகீரதி சேஷப்பன், விரிகுடாப்பகுதி, சான் ஃபிரான்சிஸ்கோ |
|
|
More
'ஸ்கந்தா' நாட்டிய நாடகம். கர்நாடக சங்கீதப் பெருவிழா 2020
|
|
|
|
|
|
|