Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
January 2020 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | சினிமா சினிமா | சின்னக்கதை | அன்புள்ள சிநேகிதியே | நூல் அறிமுகம் | பொது | சாதனையாளர்
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | சூர்யா துப்பறிகிறார் | Events Calendar | ஹரிமொழி | சிறுகதை | சமயம் | அஞ்சலி | முன்னோடி
Tamil Unicode / English Search
சினிமா சினிமா
சக்ரா
குபேரன்
டாக்டர்
சீறு
சுல்தான்
பொங்கல் படங்கள்
- அரவிந்த்|ஜனவரி 2020|
Share:
தர்பார்
நீண்ட இடைவெளிக்குப் பின் ரஜினிகாந்த் காவல்துறை அதிகாரியாக இப்படத்தில் நடித்திருக்கிறார். நாயகி: நயன்தாரா. உடன் சுனில்ஷெட்டி, நிவேதா தாமஸ், தம்பி ராமையா, ஸ்ரீமன், நவாப்ஷா, ஜடின் சர்னா, டலிப் தகில், பிரதிக் பாபர், யோகிபாபு உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இசை: அநிருத். இயக்கம்: ஏ.ஆர். முருகதாஸ்.



பட்டாஸ்
'எதிர் நீச்சல்', 'காக்கிச்சட்டை', 'கொடி' போன்ற வெற்றிப்படங்களைத் தந்த துரை செந்தில்குமார் இயக்கும் படம் இது. கதாநாயகன் தனுஷ். நாயகியர் சிநேகா மற்றும் மெஹரின் பிர்ஸ்டா. பாடல்களை விவேக் எழுத, இசை: விவேக்-மெர்வின் இசையமைத்துள்ளனர். "தனுஷ் இதில் மகன், அப்பா என்று இரண்டு கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். இந்த படம் களரிக்கு முன்பு சோழர் காலத்தில் இருந்த ஒரு தற்காப்புக் கலையைச் சுற்றி வருகிறது. இதற்காக தனுஷும் சிநேகாவும் 15, 20 நாள் பயிற்சி எடுத்துக்கொண்டனர்" என்கிறார் இயக்குநர். யூ ட்யூபில் வெளியான இந்தப் படத்தின் 'சில் ப்ரோ' பாடல் 30 லட்சத்திற்கும் மேல் ஹிட்டுடன் பெருத்த வரவேற்பைப் பெற்றுள்ளதாம்.



ராஜவம்சம்
சசிகுமார் நாயகன்; நாயகி, நிக்கி கல்ரானி. உடன் விஜயகுமார், தம்பிராமையா, மனோபாலா, சதீஷ், ரமேஷ்கண்ணா, சிங்கப்புலி, ராஜ்கபூர், நமோ நாராயணன், யோகிபாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இயக்குநர் சுந்தர் சி.யிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றிய கதிர்வேலு படத்தை இயக்கியிருக்கிறார். இசை: சாம் சி.எஸ். நாயகன், நாயகியைச் சேர்த்து இப்படத்தில் 50 பேர் நடிக்கின்றனராம்!



சுமோ
மிர்ச்சி சிவா நாயகனாகவும், பிரியா ஆனந்த் நாயகியாகவும் நடிக்கும் படம் இது. உடன் மனோபாலா, எம்.எஸ். பாஸ்கர், வி.டி.வி. கணேஷ், யோகிபாபு, ஷாஜி, மகேஷ் மஞ்ரேக்கர், சங்கி பாண்டே உள்ளிட்டோர் நடித்துள்ளனர். பா. விஜய், கபிலன் வைரமுத்து, ரோகேஷ் பாடல்களை எழுத, நிவாஸ் கே. பிரசன்னா இசையமைத்துள்ளார். எஸ்.பி. ஹோசிமின் கதை, எழுதி இப்படத்தை இயக்குகிறார். திரைக்கதை, வசனம்: மிர்ச்சி சிவா. ஜப்பானில் பெருமளவு படமாகியிருக்கும் இப்படத்தில் சுமோ வீரர்கள் சிலர் நடிக்கின்றனர். சுமோக்களின் வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப்படும் முதல் படம் இது.



பொன் மாணிக்கவேல்
பிரபுதேவா காவல்துறை அதிகாரியாக நடித்திருக்கும் படம். நிவேதா பெத்துராஜ் நாயகி. உடன் சுரேஷ்மேனன், மகேந்திரன், சூரி, பிரபாகர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். பாடல்களை மதன் கார்க்கி, விவேகா, ரஞ்சன் எழுத, டி. இமான் இசையமைத்துள்ளார்.
அரவிந்த்
More

சக்ரா
குபேரன்
டாக்டர்
சீறு
சுல்தான்
Share: 




© Copyright 2020 Tamilonline