வேண்டுமடி எப்போதும் விடுதலை உலகளாவிய அகண்ட பஜனை ந்ருத்யகல்யா: 'சகியே' கொஞ்சம் கதை கொஞ்சம் இலக்கணம் அரங்கேற்றம்: சுருதி ரமேஷ் அரங்கேற்றம்: நந்தினி ரத்னம்
|
|
|
|
ஜூலை 18 அன்று விரிகுடாப் பகுதியின் பிரபல நாட்டியப் பள்ளியான ந்ருத்யகல்யா டான்ஸ் கம்பெனியின் மாணவி ஸ்ரீவித்யா சந்திரமௌளீஸ்வரனின் அரங்கேற்றம் நடைபெற்றது. பள்ளியின் இயக்குநர் குரு ஜனனி நாராயணன் நிகழ்ச்சியைத் திறம்பட வடிவமைத்திருந்தார்.
புஷ்பாஞ்சலி மற்றும் ஸ்ரீரஞ்சனி ராக கணேச துதியுடன் தொடங்கியது அரங்கேற்றம். இதற்கு குரு கிரண் சுப்ரமணியம் வெகு அழகாக நடனம் வடிவமைத்திருந்தார். திஸ்ர ஜதியில் நரசிம்ம அலாரிப்பு தொடர்ந்தது. பாரம்பரியமான வழுவூர் ஜதிகளை உள்ளடக்கிய லதாங்கி ராகக் 'கொஞ்சும் சலங்கை', குரு ஜனனியின் கைவண்ணத்திலும் ஸ்ரீவித்யாவின் பாத வேலையிலும் மிளிர்ந்தது. தேவி கிருதி, ஊத்துக்காடு வேங்கடசுப்பையரின் நிந்தாஸ்துதி, புரந்தரதாசர் கிருதி ஆகியவற்றோடு ராஜநடை போட்ட அரங்கேற்றம், லால்குடி ஜெயராமனின் மோஹன கல்யாணி தில்லானாவுடன் நிறைவெய்தியது. |
|
செய்திக்குறிப்பிலிருந்து |
|
|
More
வேண்டுமடி எப்போதும் விடுதலை உலகளாவிய அகண்ட பஜனை ந்ருத்யகல்யா: 'சகியே' கொஞ்சம் கதை கொஞ்சம் இலக்கணம் அரங்கேற்றம்: சுருதி ரமேஷ் அரங்கேற்றம்: நந்தினி ரத்னம்
|
|
|
|
|
|
|