வேண்டுமடி எப்போதும் விடுதலை உலகளாவிய அகண்ட பஜனை ந்ருத்யகல்யா: 'சகியே' கொஞ்சம் கதை கொஞ்சம் இலக்கணம் அரங்கேற்றம்: சுருதி ரமேஷ் ஸ்ரீவித்யா சந்திரமௌளீஸ்வரன்
|
|
|
|
ஆகஸ்ட் 4, 2019 அன்று, விரிகுடாப் பகுதியின் ந்ருத்யகல்யா டான்ஸ் கம்பெனி மாணவி நந்தினி ரத்னத்தின் நடன அரங்கேற்றம் கூப்பர்டினோவில் நடைபெற்றது. நடனப்பள்ளியின் இயக்குநர் குரு ஜனனி நாராயணன் நிகழ்ச்சியைச் சிறப்புற வடிவமைத்திருந்தார்.
கணேச பஞ்சரத்னத்துடன் தொடங்கிய நிகழ்ச்சி, பந்துவராளியில் அமைந்த "ஆடிய பாதம்" பாடலில் களைகட்டியது. ஷண்முகப்ரியாவில் அமைந்த "கோலமயில் வாஹனனே" வர்ணத்துக்கு ஆடிய நந்தினி வண்ணமயிலாகவே களித்தாடினார். அதில் வந்த வள்ளி திருமணம் தத்ரூபம். தேவி கிருதி, ஜாவளி ஆகியவை தொடர்ந்தன. சின்மயா மிஷனைச் சேர்ந்த சுவாமி தேஜோமயானந்தா இயற்றிய குருஸ்துதிக்கு நந்தினி நேர்த்தியாக ஆடினார். ஊத்துக்காடு வேங்கடசுப்பையர் இயற்றிய கம்பீரநாட்டையில் அமைந்த காளிங்கநர்த்தன தில்லானாவுக்கு குரு வித்யா சுப்ரமணியம் அமைத்த நடனத்தை அழகுற ஆடி அரங்கேற்றத்தை நிறைவு செய்தார். |
|
செய்திக்குறிப்பிலிருந்து |
|
|
More
வேண்டுமடி எப்போதும் விடுதலை உலகளாவிய அகண்ட பஜனை ந்ருத்யகல்யா: 'சகியே' கொஞ்சம் கதை கொஞ்சம் இலக்கணம் அரங்கேற்றம்: சுருதி ரமேஷ் ஸ்ரீவித்யா சந்திரமௌளீஸ்வரன்
|
|
|
|
|
|
|