தெரியுமா?: UCB: தமிழ்த் துறைப் பேராசிரியர் வாசுகி கைலாசம் தெரியுமா?: இரும்பு மனிதருக்கு மாபெரும் சிலை
|
|
|
|
2019 அக்டோபர் 19, 20 (சனி, ஞாயிறு) நாட்களில், சான் ஹோஸே மாநில பல்கலைக்கழக (San Jose State University) அரங்கத்தில் உலக பகவத்கீதை மாநாடு (Global Gita Convention 2019) நடக்கவுள்ளது.
ஸ்ரீமத் பகவத்கீதையின் உன்னதமான போதனைகளைக் கரைத்துக் குடித்து அதிலேயே ஆழ்ந்துவிட்ட ஆன்மீகத்தினர் மட்டுமன்றி, அன்றாடம் சாதாரண வாழ்வை வாழ்ந்து வரும் அனைவருமே பகவத் கீதையால் பலனடைய வேண்டும் என்கிற ஆவலில், உள்மன மேம்பாட்டு மையம் (Center for Innter Resources Developement, North America - www.cirdna.org) இந்த மாநாட்டை ஏற்பாடு செய்துள்ளது.
ஸ்ரீமத் பகவத்கீதையில் திளைத்த சான்றோரின் உரைகளைக் கேட்பது மட்டுமன்றி, அவர்களைச் சந்திக்கவும், கலந்துரையாடவும் இம்மாநாடு வாய்ப்பு ஏற்படுத்தித் தருகிறது. பகவத்கீதையின் சாரம்சத்தைப் பற்றி ஆழ்ந்து அறிய ஆர்வமுள்ள அனைவரும் திரண்டு வந்து இந்நிகழ்ச்சிக்கு இலவச அனுமதி பெற்று, பங்கேற்றுப் பலனடையுமாறு பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறாம்.
ஞானத்தோடு கூடிய பக்தி வாழ்க்கைக்கு வழி காட்டுவதோடு, மண்ணில் நல்லவண்ணம் வாழவும் ஒளி தருவது பழம்பெரும் நூலான ஸ்ரீமத் பகவத் கீதை ஆகும். மாநாட்டில் பங்கேற்பதோடு, இந்தச் சிறந்த நிகழ்ச்சிக்கு நன்கொடை வழங்கவும் உங்களை வேண்டிக் கொள்கிறோம். நன்கொடைகளுக்கு 501(c)(3) பிரிவின் கீழ் வரிவிலக்கு உண்டு.
மேல்விவரங்கள், பேச்சாளர்களைப் பற்றி அறியவும், முன்பதிவு செய்யவும், நன்கொடை தந்து ஆதரிக்கவும்
இணையதளம்: www.globalgita.org மின்னஞ்சல்: info@globalgita.org |
|
கதிரவன் எழில்மன்னன் |
|
|
More
தெரியுமா?: UCB: தமிழ்த் துறைப் பேராசிரியர் வாசுகி கைலாசம் தெரியுமா?: இரும்பு மனிதருக்கு மாபெரும் சிலை
|
|
|
|
|
|
|