குருக்ருபா: ஜுகல்பந்தி டொராண்டொ: தமிழ் இருக்கை நிதிக்காக வில்லுப்பாட்டு சிகாகோ: 'பெண்' அமைப்பின் சர்வதேச மகளிர் தினம் நியூ ஜெர்சி: திருவள்ளுவர் தமிழ்ப்பள்ளி போட்டிகள்
|
|
அரோரா: வறியோர்க்கு உணவு - மார்ச் 2019 |
|
- வ. ச. பாபு|ஏப்ரல் 2019| |
|
|
|
|
மார்ச் 24, 2019 அன்று நண்பகலில் அமெரிக்கத் தமிழ்ப்பள்ளிகள், உலகத்தமிழ்மொழி அறக்கட்டளை, இடைமேற்கு மாநிலத் தமிழ்ச்சங்கம் ஆகிய அமைப்புக்கள் இணைந்து 'வசந்தத்தை வரவேற்போம்' என இந்த ஆண்டின் இரண்டாவது 'வறியோர்க்கு உணவு' நிகழ்வை நடத்தினர். இது Hesed House (659 S. River Road, Aurora, IL: 60506 - Web: www.hesedhouse.org) ஏதிலர் இல்லத்தில் நடந்தது.
சிறார்கள் அருள், ஆதித்தன், கபிலன், பிரிநித்து, பிரணவ், முகில் ஆகியோர் தம் பெற்றோர்களுடனும், திருவாட்டியர் தமிழ் அமிழ்தம், அபிராமி, பிரியா, உமா, திருவாளர்கள் சாக்ரடீசு, சுகுமாரன், தரணிதரன், பழனியப்பன் மற்றும் ஓகக்கலை ஆசிரியர் திரு. சுப்பிரமணியன் ஆகியோருடனும் சிறப்புறச் செய்தனர்.
திருக்குறளின் 4 அதிகாரங்கள் விளக்கமும், தமிழர் வசந்தத்தை எங்ஙனம் வரவேற்கின்றோம் என்பதன் விளக்கமும் கூறி, பழம்பெரும் வெளிநாட்டறிஞர்கள் சிறப்புரைகள் அடங்கிய சிறு தொகுப்பு நூலும் அளிக்கப்பட்டது.
நூற்றுக்கும் மேற்பட்ட வறியோர் உண்டு மகிழ்ந்து வாழ்த்தினர். நமது நற்பணிக்கு உதவிய ஹெஸெடு நிறுவனத்தின் நிகழ்ச்சிப் பொறுப்பாளர் திருமதி சிண்டி அவர்கட்கு நன்றி கூறி நிகழ்வை முடித்தனர்.. |
|
வ.ச. பாபு, சிகாகோ, இல்லினாய் |
|
|
More
குருக்ருபா: ஜுகல்பந்தி டொராண்டொ: தமிழ் இருக்கை நிதிக்காக வில்லுப்பாட்டு சிகாகோ: 'பெண்' அமைப்பின் சர்வதேச மகளிர் தினம் நியூ ஜெர்சி: திருவள்ளுவர் தமிழ்ப்பள்ளி போட்டிகள்
|
|
|
|
|
|
|