நியூ ஜெர்சி: வள்ளலார் தமிழ்ப் பள்ளி பொங்கல் விழா டெலவர்: தமிழர் மரபிசைக் கலை நிகழ்ச்சி சமர்ப்பண்: ஜெயதேவ் அனிருத் கச்சேரி சான் மார்டின் கோவில்: பிராண ப்ரதிஷ்டை
|
|
|
|
கடந்த ஜனவரி 20, 2019 அன்று நண்பகல் 12:00 மணிக்கு அமெரிக்கத் தமிழ்ப்பள்ளிகள், உலகத்தமிழ்மொழி அறக்கட்டளை, இடைமேற்கு மாநிலத் தமிழ்ச்சங்கம் ஆகிய அமைப்புக்கள் இணைந்து 2019ம் ஆண்டின் முதலாவது 'வறியோர்க்கு உணவு" நிகழ்வை ஹெசடு ஹவுஸ் (659 S. River Road, Aurora, IL: 60506; http://www.hesedhouse.org) இல்லத்தில் நடத்தின.
தமிழ்ப்பள்ளி மாணக்கர்கள் தம் பெற்றோர்களுடன் வந்திருந்து இதனை நடத்தி வைத்தனர். அனன்யா, இரக்சன், இரித்திக்கு, இன்பன், இனியன், சுகிர்தன், தருண், பரத்து, பிரண்டெட், நேகா ஆகியோருடன் அவர்களது பெற்றோர்களும் இந்த "வறியோர்க்கு உணவு" நிகழ்விற்கு வந்திருந்தனர்.
நாற்பது குறட்பாக்களின் விளக்கமும், பொங்கல் மற்றும் உழவர் திருநாளை ஒட்டிய நான்கு நாட்களின் பெருமை கூறும் விவரமும், தமிழர் குறித்த சிறப்புரை அடங்கிய சிறு தொகுப்புப் புத்தகமும் அளிக்கப்பட்டது. அங்கு கூடியிருந்த 200க்கும் மேற்பட்ட வறியோர் மனதார வாழ்த்தினர். |
|
வ.ச. பாபு, சிகாகோ, இல்லினாய்சு |
|
|
More
நியூ ஜெர்சி: வள்ளலார் தமிழ்ப் பள்ளி பொங்கல் விழா டெலவர்: தமிழர் மரபிசைக் கலை நிகழ்ச்சி சமர்ப்பண்: ஜெயதேவ் அனிருத் கச்சேரி சான் மார்டின் கோவில்: பிராண ப்ரதிஷ்டை
|
|
|
|
|
|
|