நியூ ஜெர்சி: வள்ளலார் தமிழ்ப் பள்ளி பொங்கல் விழா சமர்ப்பண்: ஜெயதேவ் அனிருத் கச்சேரி அரோரா: வறியோர்க்கு உணவு சான் மார்டின் கோவில்: பிராண ப்ரதிஷ்டை
|
|
டெலவர்: தமிழர் மரபிசைக் கலை நிகழ்ச்சி |
|
- லியோ பால்|மார்ச் 2019| |
|
|
|
|
ஃபிப்ரவரி 1, 2019 அன்று, பென்சில்வேனியா, டெலவர் மற்றும் நியூ ஜெர்சி மாகாணங்களில் இயங்கும் தமிழ் மரபிசைக் குழுவான 'அடவு கலைக்குழு' டெலவரில் உள்ள மகாலட்சுமி கோவில் கலாச்சார மையம் மற்றும் இந்திய அமைப்புகளின் கவுன்சிலுடன் இணைந்து 'கலைகளின் சங்கமம் 2019' விழாவை நடத்தியது. இந்த நிகழ்வில் பாரம்பரியமான தமிழ் நாட்டுப்புற இசை மற்றும் நடனம் ஆகியவை காட்சிப்படுத்தப்பட்டன. தமிழகத்தைச் சேர்ந்த 11 கிராமியக் கலைஞர்கள் இதில் பங்கேற்றனர். இவர்களில் சிலர் தமிழக அரசின் கலைமாமணி விருது பெற்றவர்கள். காவடியாட்டம், பொய்க்கால் குதிரையாட்டம், கரகாட்டம், நாகசுரம், பம்பை, பறையாட்டம், ஒயிலாட்டம், கைசிலம்பம் மற்றும் தவில் இசைக் கலைஞர்கள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
இந்த நிகழ்ச்சியில் டெலவர் மாகாணத்தின் நான்காவது மாவட்ட செனட்டர் லாரா வ. ஸ்டர்ஜியன் மற்றும் ரெப்ரெசென்டடிவ் கிறிஸ்டா கிரிஃபித் கலந்துகொண்டு கலைஞர்களைச் சிறப்பித்தனர். |
|
லியோ பால், டெலவர் |
|
|
More
நியூ ஜெர்சி: வள்ளலார் தமிழ்ப் பள்ளி பொங்கல் விழா சமர்ப்பண்: ஜெயதேவ் அனிருத் கச்சேரி அரோரா: வறியோர்க்கு உணவு சான் மார்டின் கோவில்: பிராண ப்ரதிஷ்டை
|
|
|
|
|
|
|