Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | Events Calendar | மேலும்
January 2019 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | சினிமா சினிமா | சின்னக்கதை | ஹரிமொழி | பொது | சாதனையாளர் | சமயம் | சிறுகதை | அஞ்சலி
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | சூர்யா துப்பறிகிறார் | Events Calendar | கவிதைப்பந்தல் | சிறப்புப் பார்வை | மேலோர் வாழ்வில் | முன்னோடி
சினிமா சினிமா
மஹாவீர் கர்ணா
கொலையுதிர் காலம்
கள்ளபார்ட்
கொம்புவச்ச சிங்கம்டா
திருமணம் சில திருத்தங்களுடன்
புளூவேல்
நட்புனா என்னானு தெரியுமா
பொங்கல் திரைப்படங்கள்
- அரவிந்த்|ஜனவரி 2019|
Share: 
பேட்ட


கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில், ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் 'பேட்ட.' விஜய்சேதுபதி வில்லனாக நடிக்கிறார். உடன் சசிகுமார், பாபி சிம்ஹா, இந்தி நடிகர் நவாசுதீன் சித்திக், நடிகைகள் சிம்ரன், திரிஷா, சனந்த் ரெட்டி, மேகா ஆகாஷ், குரு சோமசுந்தரம், ராம்தாஸ், ராமச்சந்திரன் எனப் பலர் நடித்துள்ளனர். இசை: அநிருத். அந்தக் காலத்து ரஜினியை இப்படத்தில் பார்க்கலாமாம்.

*****


விஸ்வாசம்


இயக்குநர் சிவா இயக்கத்தில் நான்காவது முறையாக அஜித் நடிக்கும் படம். நயன்தாரா கதாநாயகி. உடன் பிரபு, சத்யராஜ், விவேக், ராஜ்கிரண், ஜகபதிபாபு, தம்பி ராமையா, ரோபோ சங்கர், இமான் அண்ணாச்சி, ரமேஷ் திலக், யோகிபாபு என மிகப் பெரிய நடிகர் பட்டாளமே நடித்துள்ளது. ஈரமும் வீரமும் உள்ள கிராமத்து ஆசாமியாக நடித்திருக்கிறார் அஜித். படத்தில் அவருக்கு இரட்டை வேடமாம். இசை: டி.இமான். இயக்கம்: சிவா.

*****


வந்தா ராஜாவாதான் வருவேன்


சிம்பு நாயகனாக நடிக்கும் இப்படம், தெலுங்கில் பவன் கல்யாண் நடித்து வெற்றி பெற்ற 'அத்தரண்டிகி தாரேதி' படத்தின் ரீமேக். நாயகிகளாக கேத்ரின் தெரேசா, மேகா ஆகாஷ் நடித்துள்ளனர். உடன் பிரபு, ரம்யா கிருஷ்ணன், நாசர், மகத், யோகிபாபு, நான் கடவுள் ராஜேந்திரன், ரோபோ சங்கர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். காதல், ஆக்‌ஷன், நகைச்சுவை கலந்த இப்படத்தை சுந்தர் சி. இயக்குகிறார்.

*****


எல்.கே.ஜி.


ஆர்.ஜே. பாலாஜி நாயகன். நாயகி, பிரியா ஆனந்த். பிரபல அரசியல்வாதியும், இலக்கியவாதியுமான நாஞ்சில் சம்பத், இந்தப் படத்தில் நடிகராக அறிமுகமாகிறார். வசனங்களை இரா. முருகனும், பிரதீப் ரங்கநாதனும் இணைந்து எழுதியுள்ளனர். பாடல்களை விக்னேஷ் சிவனும், விவேக்கும் எழுதியுள்ளனர். இசை: லிமோன் ஜேம்ஸ். இயக்கம்: பிரபு. அரசியல் நையாண்டிப் படம் இது.
அரவிந்த்
More

மஹாவீர் கர்ணா
கொலையுதிர் காலம்
கள்ளபார்ட்
கொம்புவச்ச சிங்கம்டா
திருமணம் சில திருத்தங்களுடன்
புளூவேல்
நட்புனா என்னானு தெரியுமா
Share: