Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
January 2019 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | சினிமா சினிமா | சின்னக்கதை | ஹரிமொழி | பொது | சாதனையாளர் | சமயம் | சிறுகதை | அஞ்சலி
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | சூர்யா துப்பறிகிறார் | Events Calendar | கவிதைப்பந்தல் | சிறப்புப் பார்வை | மேலோர் வாழ்வில் | முன்னோடி
Tamil Unicode / English Search
மாயாபஜார்
பிரெட் வடை
பிரெட் மசாலா ரோல்
- தங்கம் ராமசாமி|ஜனவரி 2019|
Share:
தேவையான பொருட்கள்
பிரெட் துண்டுகள் - 6
உருளைக்கிழங்கு - 4
வெங்காயம் நறுக்கியது - 1 கிண்ணம்
இஞ்சி, பூண்டு விழுது - சிறிதளவு
பச்சை மிளகாய் - 4
மஞ்சள்தூள் - 1 தேக்கரண்டி
கரம் மசாலா - 1 தேக்கரண்டி
கடுகு - 1 தேக்கரண்டி
உளுத்தம் பருப்பு - 1 தேக்கரண்டி
எலுமிச்சைச் சாறு - 1 தேக்கரண்டி
கடலை மாவு - 1/4 கிண்ணம்
அரிசி மாவு - 1 மேசைக்கரண்டி
உப்பு - தேவைக்கேற்ப
கொத்துமல்லி (பொடியாக நறுக்கியது) - சிறிதளவு
கறிவேப்பிலை - (பொடியாக நறுக்கியது) - சிறிதளவு
எண்ணெய் - பொரிப்பதற்கு

செய்முறை

உருளைக்கிழங்கை வேகவிட்டு உரித்து வைக்கவும். வாணலியில் எண்ணெய் சிறிது விட்டு, கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்துக் கொள்ளவும். வெங்காயம், இஞ்சி பூண்டு விழுது, மிளகாய் எல்லாம் போட்டு, மசித்த கிழங்கைப் போடவும். மசாலா, மஞ்சள் பொடி, உப்புப் போட்டு பொரியல் போலச் செய்து, எலுமிச்சைச்சாறு விட்டுக் கலக்கவும் கொத்துமல்லி, கறிவேப்பிலை போட்டுக் கலக்கவும். ஒரு கிண்ணத்தில் கடலைமாவு, அரிசிமாவு, உப்பு, துளி காரப் பொடி போட்டு, பஜ்ஜி மாவு போலக் கரைக்கவும். பிரெட்டை துளிநீர் தொட்டுக்கொண்டு ஓரங்களை நீக்கிவிட்டு அப்பளக்குழவியால் லேசாக இட்டு, அதன் நடுவில் உருளைப் பொரியலைத் தடவி சுருட்டி ரோல் போலச் செய்து பஜ்ஜி மாவில் தோய்த்து, எண்ணெய் காய்ந்ததும் போட்டுப் பொரிக்கவும். இல்லாவிட்டால் இட்லித் தட்டில் வைத்து ஆவியில் வேகவைத்தும் செய்யலாம். அதுவும் சுவையாக இருக்கும். கெச்சப் தோய்த்துக் கொண்டும் சாப்பிடலாம். சுவையோ சுவை.
தங்கம் ராமசாமி,
நியூ ஜெர்சி
More

பிரெட் வடை
Share: 




© Copyright 2020 Tamilonline