Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
August 2005 Issue
ஆசிரியர் பக்கம் | நேர்காணல் | மாயாபஜார் | சமயம் | இலக்கியம் | அமெரிக்க அனுபவம் | அன்புள்ள சிநேகிதியே | சிறப்புப் பார்வை | புழக்கடைப்பக்கம்
குறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | நலம்வாழ | வார்த்தை சிறகினிலே | தமிழக அரசியல் | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | நேர்காணல் | வாசகர் கடிதம்
நடந்தவை
Tamil Unicode / English Search
நிகழ்வுகள்
தொடுவானம்
தமிழர் புனர்வாழ்வுக் கழகம் நடத்தும் மெல்லிசை நிகழ்ச்சி
- |ஆகஸ்டு 2005|
Share:
Click Here Enlargeதமிழர் புனர்வாழ்வுக் கழகம் இலங்கையின் வடக்கு-கிழக்குப் பகுதிகளில் வாழும் போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்குப் புனர்வாழ்வு அளிக்கவும் அவர்கள் வாழ்வை மேம்படுத்தவும் ஆரம்பிக்கப்பட்ட அமைப் பாகும். இக்கழகம் 1985ம் ஆண்டு இலங்கை யிலிருந்து தமிழ் நாட்டுக்கு புலம் பெயர்ந்த தமிழ் அகதிகளுக்காக ஆரம்பிக்கப்பட்டது. இன்று, தமிழர் புனர் வாழ்வுக் கழகம் ஒரு வலிமையுள்ள அரசு சார்பற்ற நிறுவனமாக, இலங்கையில் செயல்பட்டு வருகிறது. கழகத்தின் தலைமையகம் இலங்கையில் கிளிநொச்சியில் உள்ளது. அதன் கிளைகள் இலங்கையின் பல பகுதிகளிலும், பல்வேறு நாடுகளிலும் உள்ளன.

பல்லாண்டுக் கணக்கான போரினால் பாதிக்கப்பட்ட வடக்கு-கிழக்குப் பகுதிவாழ் மக்கள் கடந்த டிசெம்பர் 26, இயற்கையின் தாக்குதலுக்கு ஆளாகினர். ஏற்கனவே இப்பகுதிகளில் தமிழர் புனர்வாழ்வுக் கழகம் செயல்பட்டு வந்ததால், சுனாமியால் தாக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் அளிக்கும் பொறுப்பையும் கழகம் ஏற்றுக் கொண்டது. வெளி நாடுகளில் உள்ள தமிழ் மக்களின் நிதி உதவியைக் கொண்டு, இலங்கையின் வடக்கு-கிழக்குப் பகுதி களில் உள்ள மக்களுக்கு உடனடி நிவாரணம் அளித்தது. இப்போது UNICEF, UNHCR போன்ற சர்வதேச அமைப்பு களோடு இணைந்து வடக்கு-கிழக்கு தமிழ் மக்களுக்கு இடைக்கால இருப்பிடங்கள் அமைக்கும் பணிகளிலும், நீண்ட காலப் புனர்வாழ்வு அளிக்கும் செயல்களிலும் ஈடுபட்டிருக்கிறது.

உடனடி/இடைக்கால நிவாரணப் பணிகள் 160,000 மக்களுக்கு நாள்தோறும் உணவு, குடி நீர், மருத்துவ வசதிகள், நோய் வருவதைக் கட்டுப்படுத்த மருந்துகளும், சுகாதாரத் தேவைகள் போன்றவற்றை அளித்தது.

9000 குடும்பங்களுக்கு இரண்டு வருடங்கள் நீடிக்கக் கூடிய சுகாதார வசதிகள் உள்ள இடைக்கால இருப்பிடங்கள் கட்டியது.

சுனாமியால் பாதிக்கப்பட்ட 6000 - க்கும் மேற்பட்ட பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் மனநல மருத்துவம் அளித்துள்ளது.

இடைக்கால/நீண்டகால புனர்வாழ்வுப் பணிகள்

தமிழர் புனர் வாழ்வுக் கழகத்தின் ஒரு முக்கிய பணி, உழைப்பாளர்களை (bread winners) இழந்த குடும்பங்களுக்கு சுய வாழ்வு வாழ்வதற்குப் பயிற்சி அளித்தல் ஆகும். அதற்கேற்ப பலருக்கு தையல் பயிற்சியும் இயந்திரங்களை பழுது பார்க்கும் பயிற்சியும் அளிக்கப்படுகின்றன.

6 படகுகள் செய்யும் ஆலைகள் ஆரம்பித்துள்ளது. ஒவ்வொரு ஆலையிலும் 30 பெண்களும் 5 ஆண்களும் வேலை செய்கிறார்கள். ஒரு மாதத்தில் ஒவ்வொரு ஆலையிலும் 20-30 படகுகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. தற்போது 100 படகுகள் செய்யப்பட்டு மீனவர் கூட்டுறவுக்குக் கழகங்களுக்கும் சுனாமி யால் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கும் வாழ்க்கை நடத்தக் கொடுக்கப்பட்டுள்ளன.

நீண்ட கால வாழ்க்கைக்கேற்ற வீடுகள், பள்ளிக்கூடம், மருத்துவமனை, இவ் வாறான பொது நலத்திற்கேற்ப அமைப்புகள் கொண்ட கிராமங்கள் உருவாக்க திட்டங்கள் அமைக்கப் பட்டுள்ளன. 10 க்கும் மேற்பட்ட கிராமங்கள் தற்போது உருவாகி வருகின்றன.

இன்னும் பல கிராமங்கள் அமைக்க, சிறுவர் மையங்கள், நூலகங்கள், மருத்துவ நிலையங்கள், சமூக நிலையங்கள் அமைக்க நிதி உதவியும் தோளுதவியும் தேவையாக உள்ளன. உதவி செய்ய விரும்பினோர் பின்வரும் வலைத்தளத்தில் மேலும் விவரங்கள் அறியலாம் அல்லது கீழேயுள்ள முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பலாம்

http://www.trousa.org

info@trousa.org


இந்த பணிகளுக்கு நிதி திரட்டுவதற்காகவும், இந்த வருடம் ஏற்கனவே நிதி உதவி செய்த உங்கள் எல்லோருக்கும் நன்றி சொல்வதற்காகவும் ஆகஸ்ட் மாதம் A S ஐங்கரன் குழுவினர் அளிக்கும் மெல்லிசை நிகழ்ச்சி நடக்கிறது.

பி சுசீலா போன்ற பிரபல பாடகர்களுடன் சேர்ந்து பாடியிருக்கும் A S ஐங்கரன் தன் குரலால் P B ஸ்ரீனிவாஸ், A M ராஜா, T M செளந்தரராஜன், ஹரிஹரன், கண்டசாலா, S P பாலசுப்ரமணியம் போன்றவர்களை உங்கள் முன் கொண்டு வந்து நிறுத்துவார்.

அவருக்குத் துணையாக அனிதா கிருஷ்ணன் மற்றும் பல சான் பிரான் சிஸ்கோ வளைகுடாப் பகுதிப் பாடகர்களும் இசைக் கலைஞர்களும் உங்களை மகிழ்விப்பார்கள்.
நிகழ்ச்சிக்கு வந்து ஆதரிக்கும்படி எல்லோ ரையும் பணிவுடன் கேட்டுக்கொள்கிறோம்.

Bay Area Event:
Aug 13, 2005 at 6pm
Louis B Mayer Theater,
Santa Clara University,
Santa Clara, CA 95053

Contact:
Vathana: 408.735.1754
Brinda: 925.443.3337
Vimal: 408.736.8094

Los Angeles Event:
Aug 14th, 2005 at 6pm
Lanterman Auditorium,
4490 cornishon Avenue,

La Canada, CA 91011
Contact:
Nanda : 626.795.7898
Perinpam: 818.708.0456
Mannivannan: 951.688.3155
Sree: 626.353.0742
More

தொடுவானம்
Share: 




© Copyright 2020 Tamilonline