ஹூஸ்டன்: தமிழ்ப்பள்ளி பயிற்சிப்பட்டறை கச்சேரி: ஸ்ரீரஞ்சனி சந்தானகோபாலன் கலிபோர்னியா: பெரியார் 140வது பிறந்தநாள் விழா 'யாதவா மாதவா' நாட்டிய நிகழ்ச்சி BATM: மாணவர்களுக்கு வழிகாட்டல் கருத்தரங்கம் அரங்கேற்றம்: சஞ்சனா சங்கர் வேளாங்கண்ணி ஆரோக்கிய அன்னை தேர்த்திருவிழா கன்கார்டு முருகன் திருவிழா நாடக விமர்சனம்: சர்வம் பிரம்மமயம் BATM: இந்திய சுதந்திரதினக் கொண்டாட்டம் அரங்கேற்றம்: கிஷோர் ஐயர் அரங்கேற்றம்: சாதனா மாதேஸ்வரன் ந்ருத்யகலா: 'தேவரதா - கடவுளரின் வாகனங்கள்'
|
|
|
|
செப்டம்பர் 8, 2018 அன்று 'Beyond Ocens' என்கிற இசை நிகழ்ச்சி சன்னிவேல் ஃப்ரீமாண்ட் உயர்நிலைப்பள்ளியில் நடந்தது. நாதலயா இசைப்பள்ளி மாணவர்களும் விரிகுடாப் பகுதியின் திறம்பெற்ற இசைக் கலைஞர்களும் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர். Inclusive World என்ற தொண்டு நிறுவனத்திற்கு நிதி திரட்டுவதற்காக இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டது. கர்நாடக இசைப் பின்புலத்தில் ஓர் அற்புதமான மாலையாக உருவெடுத்தது இந்த நிகழ்ச்சி.
கம்பீர நாட்டையில் "ஸ்ரீவிக்னராஜம் பஜே" என்கிற வெங்கட சுப்பையரின் க்ருதியுடன் நிகழ்ச்சி துவங்கியது. அடுத்து தீக்ஷிதரின் நோட்டு ஸ்வரங்கள், தியாகராஜரின் "வர லீலா கானலோலா" எனச் சிறு பிள்ளைகள் அற்புதமாகப் பாடினார்கள். இந்தப் பகுதி ஹரிகேசநல்லூர் முத்தையா பாகவதரின் இங்கிலீஷ் நோட்டுடன் இனிமையாக முடிந்தது. அடுத்து சைனிஸ்தா மற்றும் மிருதங்கம் தனி ஆவர்த்தனம். சில சமயங்களில் போர் முரசைப் போலவும் சில சமயங்களில் இனிமையாகவும் இருந்தது.
அடுத்து முத்தையா பாகவதரின் "பசுபதி ப்ரியா" சிட்டை ஸ்வரங்களுடன் களை கட்டியது. இந்த நிகழ்ச்சியை உருவாக்கியவர்கள் சாக்ஸபோன், ட்ரம்பெட் மற்றும் கிடாரில் இந்தப் பாடலின் அனுபல்லவியையும் சேர்த்து ஒரு புதிய உணர்வை ஏற்படுத்தினார்கள். அடுத்து இதே கருவிகளைக் கொண்டு ஒரு புளூஸ் பாடலை ஆரம்பித்து, வீணையில் ஆபேரி ராகமாக முகிழ்த்து, கடைசியில் தியாகராஜரின் நகுமோமோவாக மலர்ந்தது. பாடிய பெண்களின் கல்பனா ஸ்வரங்கள் இந்த உருவகத்தைக் கண்முன்னே கொண்டுவந்து நிறுத்தின. அடுத்து தீக்ஷிதரின் "ஸ்வாமிநாத பரிபாலயா" நாட்டை ராகத்தில் மலர்ந்தது. பலவிதமான ஜதிகளையும், ஸ்வரங்களையும், கல்பனா ஸ்வரங்களையும் சேர்த்து படர்ந்து விரிந்து, ஒரு செறிவான மலர்க்காடாக மணத்தது. நடுவில் கொன்னக்கோல், ஸ்வரக்கோர்வை, தனி எல்லாமே அற்புதம். கடைசியில் டாக்டர் பாலமுரளி கிருஷ்ணாவின் பிருந்தாவனி தில்லானாவில் ஆரம்பித்து, ஒரு திபெத்திய துதிப்பாடலில் தொடர்ந்து, மீண்டும் பிருந்தாவனியில் வந்து முடிந்தது.
நாதலயா இசைப்பள்ளி ஆசிரியர்களான சாந்தியும், ஸ்ரீராம் பிரம்மானந்தமும் வடிவமைத்த இந்த இசை நிகழ்ச்சி, ஓர் அற்புதமான கலை ஃப்யூஷன் முயற்சி. பல பிராயத்துப் பாடகர்கள், பல்வேறு இசைக்கருவிகள், பல்வேறு இசை வடிவங்கள் அனைத்தையும் கர்நாடக சங்கீதப் பின்னணியில் வழங்கியது பார்வையாளர்களுக்கு ஒரு புதிய பரிமாணத்தைக் காட்டுவதாக இருந்தது. வித்தியாசமான அனுபவம் என்பதில் சந்தேகமில்லை. |
|
பாஸ்கர் ஸ்ரீனிவாசன், சன்னிவேல், கலிஃபோர்னியா |
|
|
More