|
கணிதப் புதிர்கள் |
|
- அரவிந்த்|ஆகஸ்டு 2018| |
|
|
|
1. ராமு காலியான ஐந்து குளிர்பான பாட்டில்களைத் திருப்பிக் கொடுத்தால் கடைக்காரர் அவனுக்கு ஒரு முழு குளிர்பான பாட்டில் தருவார். ராமு அந்த மாதத்தில் 77 காலியான ஐந்து குளிர்பான பாட்டில்களைத் திருப்பிக் கொடுத்தான் என்றால் அவனுக்கு எத்தனை முழு குளிர்பான பாட்டில் கிடைத்திருக்கும்?
2. 3, 5, 8, 13, 22.... வரிசையில் அடுத்து வர வேண்டிய எண் எது, ஏன்?
3. அது ஒரு நான்கு இலக்க எண். முதல் எண் எப்போதும் எங்கும் முதலாய் வருவது. இரண்டாவது எண் மூன்றாவது எண்ணின் தலை கீழ் எண். நான்காவது எண் இரண்டாவது எண்ணில் பாதி என்றால் அந்த எண் எது?
4. ஒரு கார் நிறுத்தத்தில் இருந்த கார்களில் பத்தில் ஒரு பங்கின் நிறம் சிவப்பாக இருந்தது. புதிதாக ஒரு கார் வந்து அவற்றுடன் இணைந்தவுடன் ஒன்பதில் ஒரு பங்கு சிவப்பாக அவை மாறிவிட்டன என்றால் அங்கிருந்த மொத்த கார்களின் எண்ணிக்கை என்ன?
5. 36, 49, 64, .... அடுத்து வரவேண்டிய எண்கள் எவை, ஏன்?
அரவிந்த் |
|
விடைகள் 1. ஐந்து காலி குளிர்பான பாட்டில்கள் = ஒரு முழு குளிர்பான பாட்டில் 75 காலி குளிர்பான பாட்டில்கள் = 15 முழு குளிர்பான பாட்டில் (75/5=15) 15 காலி குளிர்பான பாட்டில்கள் = 3 முழு குளிர்பான பாட்டில் (15/5=3) 75 போக ஏற்கனவே மீதம் இருந்த காலியான பாட்டில்கள் = 2 + தற்போதைய காலியான பாட்டில்கள் = 3. மொத்தம் 5 காலியான குளிர்பான பாட்டில்கள் = 1 முழு குளிர்பான பாட்டில் ஆக ராமுவுக்கு 15 + 3 + 1 என 19 முழு குளிர்பான பாட்டில்கள் கிடைத்திருக்கும்.
2. எண்களின் இரு மடங்கிலிருந்து 1, 2, 3 என வரிசைப்படிக் கழிக்க அடுத்த எண் வருமாறு எண் வரிசை அமைந்துள்ளது. முதல் எண் 3. இரு மடங்கு = 6. 1-ஐக் கழிக்க வருவது 5. அதன் இரு மடங்கு 10. அதிலிருந்து இரண்டைக் கழிக்க வருவது 8. இவ்வரிசைப்படி 22ஐ அடுத்து வர வேண்டிய எண் = 22 * 2 = 44 - 5 = 39.
3. முதல் எண் = எப்போதும் எங்கும் முதலாய் வருவது = 1 இரண்டாவது எண், மூன்றாவது எண்ணின் தலை கீழ் எண் = 9 (மூன்றாவது எண் 6 ஆக இருந்தால் மட்டும்) அல்லது 8 (8ன் தலைகீழ் எண்ணும் 8 தான்) நான்காவது எண் = இரண்டாவது எண்ணில் பாதி = இரண்டாவது எண் 9 என்று வந்தால் பொருந்தாது. ஆகவே இரண்டாவது எண் 8 என எடுத்துக் கொண்டால் அதில் பாதி = 4 ஆக அந்த நான்கு இலக்க எண் = 1884.
4. கார்களின் எண்ணிக்கை = x அவற்றில் x/10 = சிவப்பு நிறம் அவற்றில் புதிதாக வந்து ஒரு கார் இணைந்தவுடன் சிவப்புக் கார்களின் எண்ணிக்கை = x/9 1 + x/10 = (x+1)/9 9*10 + 9x = 10x + 10 90 – 10 = 10x – 9x x = 80 இதனுடன் ஒன்றைக் கூட்ட = 81. 80 கார்கள் இருந்தபோது அவற்றில் பத்தில் ஒரு பங்காக 8 சிவப்புக் கார்கள் இருந்தன. ஒரு கார் கூடுதலாகச் சேர்ந்து 81 ஆனபோது அந்த எண்ணிக்கை 9ல் ஒரு பங்காக மாறியது (9*9 =81).
5. வரிசை 6 (6*6=36), 7 (7*7=49), 8 (8*8=64) ஆகிய எண்களின் வர்க்கமாக உள்ளது. ஆகவே அடுத்து வர வேண்டியது = 81 (9*9), 100 (10*10) |
|
|
|
|
|
|
|