தெரியுமா?: சிலிக்கான் வேலியில் GTEN 18 தெரியுமா?: தமிழ்நாடு அறக்கட்டளை: நியூ ஜெர்சி மாநாடு
|
|
|
|
விரிகுடா குறள்கூடம் நடத்திய திருக்குறள் போட்டி 2018ன் போது, திருமதி. சுகன்யா கல்யாணிசுந்தரம் 1330 குறட்பாக்களையும் இரண்டரை மணி நேரத்தில் பொருளுடன் ஒப்பித்து 'குறளரசி' பட்டம் வென்றார் சுகன்யா அருப்புக்கோட்டையைச் சொந்த ஊராகக் கொண்டவர். கணினித் துறையில் பொறியியல் பட்டம் பெற்றவர். தன் மூன்றுமாதக் குழந்தையிடம் குறள் சொல்லத் தொடங்கி நண்பர்களின் ஊக்குவிப்புடனும் கணவரின் ஆதரவுடனும் முதலாண்டு 80 குறள்களும், இரண்டாமாண்டு 580 குறள்களும் கூறினார். மூன்றாமாண்டில் பட்டம் வென்றிருக்கிறார்.
"ஒவ்வொரு அதிகாரத்திலும் சொல்லப்பட்ட கருத்துக்களை நான் மிகுந்த ஆர்வத்துடன் புரிந்துகொண்டதன் காரணமாகக் குறள் படிப்பது எளிதாக இருந்தது. திருக்குறளில் வள்ளுவர் யோசிக்காத துறைகளே இல்லை" என்று கூறும் இவர் புரிந்து படித்தால் எவரும் 1330 குறள்களையும் படிப்பது எளிது என்கிறார். |
|
திருமுடி துளசிராமன், ஃப்ரீமான்ட், கலிஃபோர்னியா |
|
|
More
தெரியுமா?: சிலிக்கான் வேலியில் GTEN 18 தெரியுமா?: தமிழ்நாடு அறக்கட்டளை: நியூ ஜெர்சி மாநாடு
|
|
|
|
|
|
|