அரோரா: வறியோர்க்கு உணவு ATEA: செயற்கை அறிவு மற்றும் ஆழ்ந்து கற்றல் கான்கார்டு சிவமுருகன் கோவில் IFAASD - இளைமைத் திருவிழா ரிச்மண்ட் தமிழ் சங்கம்: ஆடுகளம் நாட்யா: ராமானுஜ தரிசனம் ஹார்வர்டு தமிழ் இருக்கை எழுச்சி கீதம் ஹார்வர்டு பல்கலையில் முதல் சங்கத்தமிழ் விரிவுரை SVCC: அதிருத்ர மஹாயக்ஞம் சான் அன்டோனியோ நகரத் தீபாவளி NETS: குழந்தைகள் தினவிழா அட்லாண்டா: 'UnMasked' நாட்டிய நாடகம் லாஸ் ஏஞ்சலஸ்: அன்னை வேளாங்கண்ணி திருவிழா
|
|
|
|
அக்டோபர் 28, 2017 அன்று மிச்சிகன் தமிழ்ச்சங்கம் தீபாவளி விழாவைக் கொண்டாடியது. முக்கிய விருந்தினராக நடிகர் திரு. நெப்போலியன் பங்கேற்றார்.
அனைவரும் இந்திய உடை அணிந்து வந்திருந்தது நம் ஊரிலேயே இருப்பது போன்ற உணர்வை ஏற்படுத்தியது. அரங்கிலடங்காக் கூட்டத்தைக் காண முடிந்தது. நமது மரபின்படி குத்துவிளக்கேற்றி, பரதநாட்டியத்துடன் நிகழ்ச்சி தொடங்கியது. தொடர்ந்து பெரியோர் சிறியோர் என அனைவரும் ஆடல், பாடல், நாடகம், பேச்சு எனப் பல்சுவை நிகழ்ச்சிகளை வழங்கினார்கள்.
தீபாவளியை ஒட்டிக் கவிஞர் கண்ணதாசன் நினைவுநாள் அமைந்ததால் அவரது பாடல்களை இசைக்குழுவினர் பாடினார்கள். அவரின் பாடல் வரிகளுக்கு இன்றும் இத்துணை வரவேற்பா என்று வியப்பு ஏற்பட்டது. முன்னரே தமிழ்ச்சங்கம் நடத்திய கொலுப்போட்டி, எறிபந்துப் போட்டி, கொத்தமங்கலம் சுப்பு கதைப்போட்டி ஆகியவற்றில் வெற்றி பெற்றவர்களுக்கு நிகழ்ச்சியில் பரிசுகள் வழங்கப்பட்டன. தமிழ்நாடு அறக்கட்டளை சார்பாக ஏழை விவசாயிகள் மற்றும் ஏழை பள்ளி மாணவர்களுக்கு உதவும் வகையில் காசோலைகள் வழங்கப்பட்டன. |
|
சங்கத்தின் முந்தைய பொறுப்பாளர்களுக்கு நினைவுப்பரிசு வழங்கப்பட்டது. புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பொறுப்பாளர்கள் அறிமுகம் செய்யப்பட்டார்கள். அனைத்து நிகழ்ச்சிகளும் சிறப்பாக இருப்பினும் கடைசியாக வந்த 'ரெட்ரோ ரொமான்ஸ்' மிக வித்தியாசமாக, சுவையாக இருந்தது. MGR-சரோஜாதேவி; சிவாஜி-ஜெயலலிதா; ஜெமினி-சாவித்திரி; SSR–விஜயகுமாரி; கமல்–ஜெயப்பிரதா; ரஜினி–ராதா; சத்யராஜ்–ராதிகா; கார்த்திக்–GG என ஒரு நட்சத்திரப் பட்டாளத்தையே அரங்கேற்றி ஆடிய நடனம் மகிழ்ச்சியைத் தந்தது.
நிகழ்ச்சியின் இறுதியில் பேசிய நெப்போலியன் இந்த நடனத்தை மிகவும் பாராட்டினார். தன்னுடைய முதல் பட அனுபவத்தையும் அவருக்கு பாரதிராஜா பெயர் வைத்த சம்பவத்தையும் அவர் மிகுந்த நகைச்சுவையோடு சொன்னார். "நெப்போலியன் என்பது தமிழ்ப்பெயராக இல்லையே?" என்று நண்பர் கேட்டதற்கு, "நான் ஆங்கிலத்திலும் ஒருநாள் நடிப்பேன்" என்று சொன்னாராம். அது இப்போது மெய்யானது என்று அவர் கூறியபோது அரங்கம் அதிர்ந்தது. அவருடன் 'Devils Night' திரைப்படக் குழுவினர் வந்திருந்தனர். நன்றியுரையோடு நிகழ்ச்சி நிறைவெய்தியது.
இராம்குமார் இராமலிங்கம், டெட்ராய்ட், மிச்சிகன் |
|
|
More