தெரியுமா?: ATEA Boot Camp for Startups
|
|
|
|
டேவிட் சுந்தருக்கு வயது 16. பெற்றோரில்லாத ஆதரவற்ற சிறுவன். விவரம் தெரிந்த வயதிலிருந்தே தான் வளர்ந்த ஆதரவற்றோர் இல்லம் மட்டுமே அவனது உலகம். ஏன் ஆதரவற்றோர் இல்லத்தில் இருக்கிறோம் என்பதே தெரியாமல் வளர்ந்த அவனுக்குப் பிறவியிலேயே பார்வை கிடையாது.
பார்வை இல்லை என்ற காரணத்தால்தான் அவனைப் பெற்றோர் அனாதையாக விட்டுவிட்டுச் சென்று விட்டார்களோ என்ற சந்தேகம் அவனை வளர்த்த இல்லத்தினருக்கு உண்டு. ஒருமுறை சங்கரநேத்ராலயாவின் மருத்துவ சமூகசேவகர் சென்னை, நுங்கம்பாக்கம் குடிசைப்பகுதியில் 'கண் நலம் மற்றும் கண்தானம்' பற்றிச் சொற்பொழிவாற்றினார். அன்றைக்கு டேவிட் கேட்ட கேள்வி அவரை உலுக்கியது.
"சார், நீங்க ரொம்ப அழகாகப் பேசுகிறீர்கள். உங்களை பார்க்க ஆசையாக இருக்கிறது. அதற்கு எனக்கு உங்களால் உதவமுடியுமா?" என்று கேட்டான் டேவிட். அத்தனை பேர் முன்னிலையில் கேட்ட அந்தக் கேள்வி அவருக்கு ஒரு பெரிய சவாலாக அமைந்தது.
தன்னால் முடிந்த உதவியைச் செய்வதாகச் சொல்லி, சங்கர நேத்ராலயாவிற்கு டேவிடை அழைத்துச் சென்றார் அந்தச் சமூகசேவகர். "ஒரு கண்ணில் பார்வையை மீட்டுத் தருவதற்கான வாய்ப்பே இல்லை, மற்றொரு கண்ணில் ஒளியை உணரும் சக்தி இருக்கிறது. எனவே கார்னியல் (விழிவெண் படலம்) மாற்று ஆபரேஷன் செய்து பார்க்கலாம். அந்தக் கண்ணில் மட்டும் பார்வை திரும்பிவர வாய்ப்பு இருக்கிறது" என்றார் சங்கர நேத்ராலயாவின் கார்னியல் துறைத் தலைவராக இருந்த டாக்டர் ஜி. சீதாலக்ஷ்மி.
அனைத்து மருத்துவ வசதிகள் இருந்தும், ஆதரவற்றோர்க்கும், ஏழை எளியோர்க்கும் இலவச கார்னியல் மாற்று ஆபரேஷன் செய்யத் தயாராக இருந்தும், கண் தானத்திற்காக நேத்ராலயா சுமார் ஒருவருடம் காத்திருக்க வேண்டியதாயிற்று. பிறகு, டேவிடிற்குக் 'கார்னியா மாற்று ஆபரேஷன்' முற்றிலும் இலவசமாகச் செய்யப்பட்டது. பொருத்தப்பட்ட கார்னியாவை டேவிடின் கண் நன்கு ஏற்றுக்கொள்ளவே பார்வை கிடைத்துவிட்டது. டேவிடுக்கு அந்தச் சமூகசேவகரைப் "பார்க்கும் ஆசை" நிறைவேறியது.
டேவிட் இன்று தனியார் நிறுவனம் ஒன்றில் விற்பனை உதவிமேலாளர்.
டேவிட் மட்டுமல்ல, அவரைப் போல எத்தனையோ பேர் விழிவெண் படலக் கோளாறினால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கெல்லாம் கார்னியா மாற்று ஆபரேஷன் ஓர் அரிய வரம். |
|
இந்தச் சிகிச்சைக்கு முக்கியத் தேவை தானமாகக் கிடைக்கவேண்டிய கண். இன்று கண் தானம் ஓரளவு அதிகரித்திருப்பது உண்மைதான். ஆனால், மரணமடைந்த ஒருவரின் கண்களை தானமாகப் பெற்று, மதிப்பீடு செய்து, பதப்படுத்தி வைத்து, கண்வங்கியில் பாதுகாத்து வைத்து, பொருத்துவது வரை நிறையச் செலவாகிறது. பல நேரங்களில், தானமாகக் கிடைத்த கண் தரமற்றதாக இருப்பதும் உண்டு. அப்போதும், மிகுந்த செலவுதான்.
சங்கர நேத்ராலயாவில் முற்றிலும் இலவசமாக ஒவ்வொரு வருடமும், சுமார் 30 சதவிகித நோயாளிகள் இந்தச் சிகிச்சையைப் பெறுகிறார்கள்.
ஒரு கார்னியா மாற்று அறுவை சிகிச்சைக்கு குறைந்தபட்சம் $65 வரை செலவாகிறது. நீங்கள் அதற்கு உதவலாம்.
ஆதரவற்ற, நலிந்த சகோதர சகோதரிகளுக்கு கண்ணொளி தரும் சக்தி உங்கள் கையில் இருக்கிறது.
நன்கொடை வழங்க: "SN OM Trust Inc" என்ற பெயரில் காசோலையை அனுப்பவேண்டிய
முகவரி: Mr. Acharya, Treasurer, Sankara Nethralaya OM Trust Inc, 9710 Traville Gateway Drive No.392, Rockville, MD 20850.
ஆன்லைனில் வழங்க: www.sankaranethralayausa.org
சங்கர நேத்ராலயா ஆப்தால்மிக் மிஷன் டிரஸ்ட்டுக்கு வழங்கப்படும் நன்கொடைகளுக்கு 501 (c) (3) IRS பிரிவின்கீழ் அமெரிக்காவில் வரிவிலக்கு உண்டு.
செய்திக்குறிப்பிலிருந்து |
|
|
More
தெரியுமா?: ATEA Boot Camp for Startups
|
|
|
|
|
|
|