மாதா ஸ்ரீ அமிர்தானந்தமயி அமெரிக்கா விஜயம்
|
|
வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவை 30வது ஆண்டுவிழா |
|
- பழமைபேசி|ஜூன் 2017| |
|
|
|
|
வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கங்களின் ஒன்றியமாகக் கடந்த முப்பது ஆண்டுகளாக இயங்கிவரும் அமைப்புதான் வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவை (FeTNA). அதன் 2017ஆம் ஆண்டுக்கான விழாவை வழமைபோல 'அமெரிக்கத் தமிழர் திருவிழா' ஆக, வரும் ஜூலை 1-4 நாட்களில் மின்னசோட்டா மாகாணத்தின் மினியாபோலிஸ்-செயிண்ட்பால் இரட்டைநகர்ப் பகுதியில், மின்னசோட்டா தமிழ்ச்சங்கமும் தமிழ்ச்சங்கப் பேரவையும் இணைந்து நடத்துகின்றன.
பேரவையின் ஆண்டுவிழாக்கள் தமிழ் இலக்கியம், பண்பாடு, சமூகத்திற்குப் பணியாற்றிய ஆன்றோரை நினைவு கூர்வனவாக அமைவது மரபு. இந்த ஆண்டின் விழா, நாடகக்கலை முன்னோடி சங்கரதாஸ் சுவாமிகளின் 150வது பிறந்தநாள் விழாவாகக் கொண்டாடப்படுவதோடு, 'தமிழர் கலையைப் போற்றிடுவோம்! தமிழர் மரபினை மீட்டெடுப்போம்!!' என்கிற முகப்புமொழிக்கொப்ப நிகழ்ச்சிகள் இடம்பெறும். மிசிசிப்பி, மின்னசோட்டா ஆற்றங்கரைகளில் அமைந்துள்ளது மினியாபொலிஸ் மாநாட்டு அரங்கம். முதல் நிகழ்ச்சியாக ஜூன் 30ம் நாள் நடைபெறும் விருந்தினர் மாலையில் விருந்தினர்க்கான வரவேற்பு, இளையோர் தமிழிசை, இரவு விருந்து ஆகியன இடம்பெறும்.
ஜூலை 1ம் நாளன்று மாநாட்டு அரங்கில் காலை 9 மணிக்கு நாகசுர இசை, திருக்குறள் மறையோதல், தமிழ்த்தாய் வாழ்த்துஆகியவற்றோடு நிகழ்ச்சிகள் துவங்கும். முக்கிய நிகழ்ச்சிகளாக கவிஞர் சுகிர்தராணி நெறியாள்கையில் 'தமிழ் போற்றும் தலைமுறையும் தழைக்காதோ!' எனும் தலைப்பில் கவியரங்கம், தமிழ்த்தேனீ, குறள்தேனீ போட்டிகள், சிகாகோ தமிழ்ச்சங்கம் வழங்கும் சங்கரதாஸ் சுவாமிகளின் 'சாரங்கதாரன்' நாடகம், தமிழ் முனைவோர் மாநாடு, இயக்குநர் மிஷ்கின் கலந்துரையாடல், பண்ணிசைப்பாடகர் ஜெய்மூர்த்தி வழங்கும் மரபுக்கலை மக்களிசை, தமிழ்ச்சங்கங்களின் கலைநிகழ்ச்சிகள், சமூக ஆர்வலர் கார்த்திகேய சேனாபதி சிறப்புரை முதலானவற்றோடு தமிழறிஞர் நா. வானமாமலை தொகுத்தளித்த 'மருதநாயகம்' மரபுநாடகம் சிறப்பு நிகழ்ச்சியாக இடம்பெறும்.
மரபுக்கலைகளில் முக்கியமான தெருக்கூத்து, தோற்பாவைக்கூத்து, பொம்மலாட்டம், உடுக்கைப்பாட்டு, ஒயிலாட்டம், கணியான்கூத்து, கரகாட்டம், காவடியாட்டம், தேவராட்டம், கோலாட்டம், மயிலாட்டம், காளையாட்டம், குறவன் குறத்தி, கைச்சிலம்பம், மரக்கால், தப்பு, புலிக்கலைஞன், போன்றவற்றுடன் நிகழ்ச்சிகள் தொடரும். |
|
ஜூன் 2ம் நாள் காலை தொடங்கும் நிகழ்ச்சிகளில், நாட்டிய நாடகம், கலைநிகழ்ச்சிகளோடு, இயக்குநர், களப்பணியாளர் பாகுபலி புகழ் நடிகர் ரோகிணி தலைமையில் கருத்துக்களம், இலக்கிய விநாடிவினா, குறும்படப்போட்டி, நல்லசிவம் அவர்களின் பண்ணிசை நிகழ்ச்சி ஆகியவை இடம்பெறும். ஆய்வாளர் ஒரிசா பாலு, ஒலிம்பிக் விருதாளர் மாரியப்பன் தங்கவேலு, எழுத்தாளர் சுகுமாரன், சமூக சேவகர் வெ. பொன்ராஜ் ஆகியோர் சிறப்புரை ஆற்றுவர். 'நெருப்புடா' புகழ் அருண்ராஜா, சூப்பர் சிங்கர்கள் நிரஞ்சனா, ஸ்ரத்தா, ராஜகணபதி முதலானாரோடு அக்னி குழுவினர் வழங்கும் மெல்லிசை நிகழ்ச்சி இடம்பெறும்.
இதர அரங்குகளில் இணையமர்வுகளாக, இயக்குநர் மிஷ்கின், பேரா. சுவர்ணவேலுடன் குறும்படப் பயிற்சிப் பட்டறை, தமிழ் தொழில்முனைவோர் கருத்தரங்கம், மருத்துவத் தொடர்கல்விக் கருத்தரங்கம், திருமண ஒருங்கிணைப்பு, தமிழ்க்கல்வி ஒருங்கிணைப்பு, பேலியோ உணவுக் கருத்தரங்கம், திருமூலரின் பிராணாயாமம் பயிற்சிப் பட்டறை, ஆயுர்வேத சித்த மருத்துவக் கருத்தரங்கம், நல்லசிவம் வழங்கும் பண்ணிசைப் பட்டறை, பல்கலைக்கழக முன்னாள் மாணவர் ஒன்றுகூடல், வலைஞர் கூட்டம், குடியேற்றச் சட்ட மாற்றங்கள் குறித்தான விழிப்புணர்வுக் கருத்தரங்கம், சிறப்புரையாளர்களுடன் கலந்துரையாடல், அமெரிக்கத் தமிழர் முன்னோடி விருது பெறும் ஆளுமைகளுடன் கலந்துரையாடல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெறும். அமெரிக்கத் தமிழர் முன்னோடி விருதுகளும் தெரிந்தெடுத்த ஆன்றோருக்கு வழங்கப்படும்.
ஜூலை 3ம் நாள், திரைப்பட ஆளுமை ரோகிணி, எழுத்தாளர் சுகுமாரன், ஒரிசா பாலு, கவிஞர் சுகிர்தராணி, மிஷ்கின் முதலானோர் பங்கேற்கும் இலக்கியக் கூட்டம் நடைபெறும்.
விழா குறித்த கூடுதல் தகவல்களுக்கு: www.fetnaconvention.org
பழமைபேசி, மக்கள் தொடர்புக்குழு, அமெரிக்கத் தமிழர் விழா 2017 |
|
|
More
மாதா ஸ்ரீ அமிர்தானந்தமயி அமெரிக்கா விஜயம்
|
|
|
|
|
|
|
|