தெரியுமா?: பத்ம விருதுகள்
|
|
தெரியுமா?: Indiaspora பாராட்டு விழா |
|
- மதுரபாரதி|பிப்ரவரி 2017| |
|
|
|
|
ஜனவரி 3, 2017 அன்று 'Indiaspora' அமைப்பு, புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஐந்து இந்திய-அமெரிக்கத் தலைவர்களைப் பெருமைப்படுத்தும் விதமாகப் பாராட்டுவிழா ஒன்றை வாஷிங்டனிலுள்ள மரியாட் மார்க்விஸ் ஹோட்டலில் ஏற்பாடு செய்திருந்தது. இதில் கமலா ஹாரிஸ், ஏமி பெரா, ரோ கன்னா, பிரமீளா ஜெயபால், ராஜா கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் தவிரப் புதிய அரசினால் முதுநிலைப் பதவிகளுக்கு நியமிக்கப்பட்டுள்ள நிக்கி ஹேலி, சீமா வர்மா ஆகியோரும் கௌரவிக்கப்பட்டனர்.
ஐநூறு பேருக்குமேல் பங்கேற்ற இந்த விழாவில் பங்கேற்றுப் பேசியவர்களில் சிறுபான்மைத் தலைவர் நான்சி பெலோசி, செனட்டர்கள் மார்க் வார்னர், டிம் கெய்ன், டேன் சல்லிவன், துளசி கபார்டு, ஜோ க்ரௌலி, நவ்தேஜ் சர்னா (ஐ.நா.வுக்கான புதிய இந்தியத் தூதர்), நிஷா பிஸ்வல், அருண் குமார், வனிதா குப்தா, வினய் தும்மலபள்ளி, நீதிபதி ஸ்ரீ ஸ்ரீனிவாசன் மற்றும் சில நட்புநாடுகளின் தூதர்கள் அடங்குவர். |
|
|
இந்த நட்சத்திர விழாவை 'மிஸ் அமெரிக்கா-2014' நினா தவுலூரி சுவைபடத் தொகுத்து வழங்கினார். நேபாள அமெரிக்க இசைக்கலைஞர் ப்ரகிருதி டேவ்ஜா அமெரிக்கத் தேசிய கீதத்தை உற்சாகத்தோடு இசைத்தார். 'ஆர்யா இண்டர்நேஷனல்' குழுவினர் விறுவிறுப்பான நடனம் வழங்கினர்.
இந்த விழாவை ஏற்பாடு செய்த Indiaspora, திரு. எம்.ஆர். ரங்கஸ்வாமி அவர்களால் தொடங்கப்பட்ட அமைப்பாகும். வெற்றிகரமான இந்த ஏஞ்சல் முதலீட்டாளரின் நேர்காணல்களை இங்கே வாசிக்கலாம்: தென்றல், ஜூலை 2007, தென்றல், ஏப்ரல் 2013
தொகுப்பு: மதுரபாரதி |
|
|
More
தெரியுமா?: பத்ம விருதுகள்
|
|
|
|
|
|
|