Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
June 2016 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | அன்புள்ள சிநேகிதியே | சினிமா சினிமா | சின்னக்கதை | ஹரிமொழி | சிறப்புப்பார்வை | வாசகர் கடிதம் | சமயம்
சூர்யா துப்பறிகிறார் | மாயாபஜார் | சிறுகதை | அஞ்சலி | Events Calendar | பொது | நலம்வாழ | அமெரிக்க அனுபவம் | புதினம் | சாதனையாளர்
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்
Tamil Unicode / English Search
சிறப்புப் பார்வை
FeTNA தமிழ்விழா 2016
- செய்திக்குறிப்பிலிருந்து|ஜூன் 2016||(1 Comment)
Share:
வடஅமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவையின் (FeTNA) 29ம் ஆண்டு தமிழ்விழா 2016 ஜூலை 1-3 தேதிகளில் (வெள்ளிமுதல் ஞாயிறுவரை) நியூ ஜெர்சியின் Patriot's Theatre (War Memorial, Trenton NJ) அரங்கில் சிறப்புற நடைபெற இருக்கிறது. அமெரிக்கா, கனடா, இந்தியா, ஆப்பிரிக்கா, ஜெர்மனி உள்ளிட்ட பலநாடுகளிலிருந்து 2000 பேர் பங்கேற்கவிருக்கிற இவ்விழாவில் பல பிரபலமான விருந்தினர்களும் அழைப்பாளர்களும் கலந்துகொண்டு சிறப்பிக்கவுள்ளனர்.

அமெரிக்காவில் இயங்குகிற 43க்கு மேற்பட்ட தமிழ்ச்சங்கங்களை ஒருங்கிணைக்கும் அமைப்பான வடஅமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவை ஒரு லாபநோக்கற்ற தன்னார்வ அமைப்பாகும். 1988ல் தொடங்கப்பட்டது முதலாக வருடந்தோறும் ஆண்டுவிழாவை தனது உறுப்பினரான தமிழ்ச்சங்கம் ஒன்றுடன் இணைந்து வெற்றிகரமாக நடத்திவருகிறது. 1994, 2003 ஆண்டுகளுக்குப் பின் 2016ல் இவ்விழா நியூ ஜெர்சியில் மீண்டும் நடக்கிறது. தமிழர் கலாசாரம், பண்பாடு, வரலாறு, இலக்கியம், இசை ஆகியவற்றை முன்னெடுப்பதையும் பரப்புவதையும் தனது நோக்கங்களுள் ஒன்றாகக் கொண்டுள்ள ஃபெட்னா விழாக்களில் அவைகுறித்த சிறப்பு நிகழ்ச்சிகள் வருடந்தோறும் நடைபெறுகின்றன. மேலும் தொழில்நுட்பம், தொழில்முனைவு, இளைஞர் முன்னேற்றம், குறும்படங்கள், திரைப்படம் உள்ளிட்ட நவீன துறைகளில் தமிழையும் தமிழரையும் முன்னெடுத்துச் செல்லும்விதமாக இணைநிகழ்வுகள் நடைபெற உள்ளன.

ஃபெட்னாவின் தலைவரான வாஷிங்டன் டி.சி. வட்டாரத் தமிழ்ச்சங்கத்தின் திரு. நாஞ்சில் பீற்றர் இவ்விழாவை வழிநடத்தும் குழுவுக்குத் தலைமையேற்று முனைந்து செயல்படுகிறார். 26 ஆண்டுகளுக்கு மேல் செயல்பட்டுவரும் நியூ ஜெர்சி தமிழ்ச் சங்கத் தோற்றுவிப்பாளரும், முதல் தலைவருமான மருத்துவர் சுந்தரம் இவ்விழாவின் ஒருங்கிணைப்பாளராகச் செயல்படுகிறார். நியூ ஜெர்சி தமிழ்ச்சங்கத் தலைவர் திருமதி. உஷா கிருஷ்ணகுமார் தமது செயற்குழு உறுப்பினர்களுடன் இணைந்து பேராதரவு அளித்து வருகிறார்.

விழாவின் தமிழிசை நிகழ்ச்சியில் இசைவல்லுநரும் சமூகவிமர்சகருமான டி.எம். கிருஷ்ணாவின் தமிழிசை நிகழ்ச்சி மிகவும் எதிர்பார்க்கப்படுகிறது. தொழில்முனைவோர் அமர்வில் நடிகரும் தொழிலதிபருமான அரவிந்தசாமி பங்கேற்கிறார். கருத்துக்களம் நிகழ்ச்சியை மருத்துவர் ஜி. சிவராமன் வழிநடத்துவார். தமிழிலக்கியச் சொற்பொழிவுகளைப் பேரா. அ. ராமசாமி, இந்திய ஆட்சிப் பணியர் ஜி. பாலசந்திரன் ஆகியோர் வழங்கவுள்ளனர். நவீன பெண்கவிஞர்களில் முக்கியமானவரான சுகிர்தராணி தலைமையில் கவியரங்கம் நடைபெறும். கனடா நாட்டுப் பாராளுமன்ற உறுப்பினர் கரி ஆனந்தசங்கரி சிறப்புரை வழங்குகிறவர்களில் ஒருவர். திரைப்பட பின்னணிப் பாடகர் விஜய் பிரகாஷ், சூப்பர் சிங்கர் மூலம் புகழ்பெற்ற இளம்பாடகர்கள் ஹரிப்ரியா, ஜெஸிகாஜூட் ஆகியோர் பங்குபெறும் திரைப்பட இன்னிசையும் உண்டு.

"தமிழ்ப் பள்ளி, தமிழ்க் கல்வி" என்ற நோக்கத்துடன் நடைபெறும் இவ்விழாவில் குழந்தைகள் நாடக நிபுணர் பேரா. வேலு சரவணன் இயக்கி, அமெரிக்கத் தமிழ்க் குழந்தைகள் பங்குபெறும் நாடகமும் உண்டு. இவையன்றி, இலக்கிய வினாடி வினா, குறள் தேனீ, பயிற்சிப் பட்டறைகள், வரலாற்று நாடகம், மாணவர்களுக்கான போட்டிகள், பல்வேறு தமிழ்ச்சங்கங்கள் வழங்கும் விதவிதமான கலைநிகழ்ச்சிகளும் உண்டு. தனித்தமிழ் இயக்க நூற்றாண்டையும் தமிழ்க் கல்வியையும் முன்னிறுத்தி நடத்தப்படும் இவ்விழா அமெரிக்காவாழ் தமிழர்கள் கலந்துகொள்ள ஓர் அரிய வாய்ப்பாகும்.

விழாவுக்கான நன்கொடை செலுத்தவும் வருகைப் பதிவு செய்யவும்: www.fetna.org

P.K. சிவகுமார்,
நியூ ஜெர்சி
Click Here Enlargeதமிழ் தொழில்முனைவோர் அரங்கம்

FeTNA தமிழ்விழாவின் அங்கமாக ஜூலை 2ம் தேதியன்று காலை 8 மணிமுதல் மாலை 6:30 மணிவரை பேட்ரியட் தியேட்டரில் (War Memorial, Trenton NJ) நடக்கவிருக்கும் தமிழ் தொழில்முனைவோர் அரங்கத்தில் உரைகள், தொடக்க நிறுவனம் குறித்த உரையாடல், கணப்பருகே கதைப்பு (Fireside chat) ஆகியவை நடைபெறும். சக-தொழில்முனைவோர், ஆர்வலர், வழிகாட்டுனர் ஆகியோருடன் தொடர்புகொள்ள இது நல்லதொரு வாய்ப்பாக அமையும்.

திரு. ராம் நாகப்பன் (CIO, Pershing) அவர்கள் நிகழ்வைத் தொடங்கிவைத்துப் பேசுவார். அரங்கத்தில் பங்கேற்கவிருக்கும் பிற முக்கியஸ்தர்கள்: அரவிந்த் சுவாமி (நடிகர், தொழிலதிபர்); பிரேம் அபூர்வசாமி (CIO, Natl Labor Rel Board); ஹேமலதா அண்ணாமலை (CEO Ampere); சுஜா சந்திரசேகரன் (CIO, Kimberly Clarke); பிரசன்னா கோபாலகிருஷ்ணன் (CIO, Boston Private); ஜான்சி கந்தசாமி (VP, Engineering, GE); சஞ்சய் முரளி (CEO, Neural Therapeutics); விஜயலக்ஷ்மி நாச்சியார் (Co-Founder, Ethicus); N. சந்திரசேகரன் (CEO, TCS); மஹேஷ் நாராயணன் (Founder, CEO PepVax); கரோலின் பிரபா (Founder, VCare); பிரமீளா ஸ்ரீனிவாசன் (CEO, CharmHR); ஈஷ் சுந்தரம் (CIO, JetBlue Airways); V. சுப்ரமணியன் (CEO, Novel Labs); சுபாஷிணி வணங்காமுடி (CEO, Satori Studios).

மேலதிகத் தகவலுக்கும் முன்பதிவுக்கும்:
www.TEFCON.org
www.fetnaconvention.org

செய்திக்குறிப்பிலிருந்து
Share: 




© Copyright 2020 Tamilonline