கிச்சன் கில்லாடி வெற்றிக் குறிப்புகள் இரண்டாமிடம்: பாதாம் கீன்வா புலாவ்
|
|
மூன்றாமிடம்: கீன்வா மஞ்சூரியன் |
|
- |டிசம்பர் 2015| |
|
|
|
|
|
சாஸ் செய்ய தேவையான பொருட்கள்: பூண்டு (பொடியாக நறுக்கியது) - 1 தேக்கரண்டி, காரட் (பொடியாக நறுக்கியது), குடைமிளகாய், லீக்ஸ் தழை ½ கிண்ணம், Chings மஞ்சூரியன் சாஸ் - 1 பாக்கெட், தண்ணீர் - 1 கிண்ணம், தக்காளி மிளகாய் சாஸ், ஆலிவ் எண்ணெய் ½ தேக்கரண்டி, வெங்காயத்தழை அலங்கரிக்க.
சாஸ் செய்முறை: அடுப்பில் வாணலியை வைத்து அரை தேக்கரண்டி எண்ணெய் ஊற்றவும். சூடானதும் பூண்டைப் போட்டு வதக்கவும். வாசனை வந்ததும் வெட்டிவைத்த காய்கறிகளைச் சேர்த்து வதக்கவும். பின்னர் ஒரு கிண்ணம் தண்ணீரும், மஞ்சூரியன் சாஸும் கலந்து கொதிக்கவைக்கவும். சிறிதளவு தக்காளி மிளகாய் சாஸ் சேர்க்கவும். அடுப்பில் சூட்டைக் குறைத்து சாஸை சூடாக வைத்திருக்கவும். அடுத்து கீன்வா உருண்டை தயாரிக்க வேண்டும். |
|
கீன்வா உருண்டை தயாரிக்க தேவையான பொருட்கள்: ஊறவைத்த கீன்வா ½ கிண்ணம், காரட் (பொடியாக நறுக்கியது) - ¼ கிண்ணம், குடைமிளகாய் (பொடியாக நறுக்கியது) - ¼ கிண்ணம், லீக் தழைகள் (பொடியாக நறுக்கியது) - ¼ கிண்ணம், கிராம்பு 2, பூண்டு (பொடியாக நறுக்கியது), பச்சைமிளகாய் (பொடியாக நறுக்கியது), உப்பு, ஆலிவ் எண்ணெய், துருவிய பன்னீர் ¼ கிண்ணம், சோள மாவு 2 தேக்கரண்டி
செய்முறை: வாணலியில் எண்ணெய், பூண்டு சேர்த்து வதக்கவும். கலவையில் ஒரு கிண்ணம் தண்ணீர், கீன்வா, தேவையான உப்பு சேர்த்து கொதிக்கவைக்கவும். சூட்டைக் குறைத்து மூடிவைக்கவும். கீன்வா நன்றாக வெந்த பிறகு அடுப்பிலிருந்து இறக்கி ஆற வைக்கவும். வெந்த கீன்வாவுடன் நறுக்கிவைத்த காரட், குடைமிளகாய், பன்னீர், சோளமாவு கலந்து பிசிறிக் கொள்ளவும். கலவையைச் சிறு உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும். வாணலியில் எண்ணெய் சேர்த்து உருண்டைகளை பொன்னிறம் ஆகும்வரை வறுக்கவும்.
முன்பே செய்துவைத்த சாஸில் உருண்டைகளைச் சேர்த்து துண்டாக்கிய ஸ்ப்ரிங் வெங்காயத்தழை தூவினால் கீன்வா மஞ்சூரியன் தயார்.
மதுமாலா, அதிதி, நிலேகா |
|
|
More
கிச்சன் கில்லாடி வெற்றிக் குறிப்புகள் இரண்டாமிடம்: பாதாம் கீன்வா புலாவ்
|
|
|
|
|
|
|