தெரியுமா?: அமெரிக்காவில் முன்னணி கிரிக்கெட் தாரகைகள் தெரியுமா?: டாலஸ் தமிழ்மன்றம் தெரியுமா?:சிலிக்கன் வேல்லியில் 'சில்லு' கர்நாட்டிக் ப்ரீமியர் லீக்: சங்கீத சாம்ராட் போட்டி தெரியுமா?: லட்சுமி மூர்த்திக்கு SEACOLOGY விருது தெரியுமா?: இந்திய ஓய்வூதியம் பெறுவோர் SBI கிளையில் உயிர்ச் சான்றிதழ் பெறலாம் தெரியுமா?:கிச்சன் கில்லாடி போட்டி முடிவுகள் தெரியுமா?: PNG ஜுவெல்லர்ஸ் ஃப்ரீமான்ட் கிளை துவக்கம்
|
|
சான் ஃபிரான்சிஸ்கோ - டெல்லி விரைவு விமானசேவை ஏர் இந்தியா தொடங்கியது |
|
- ச. திருமலைராஜன்|நவம்பர் 2015| |
|
|
|
|
|
செப்டம்பர் 27 அன்று சான் ஹோசேயில் பிரதமர் மோதி உரையின் இறுதியில் டிசம்பர் 2 முதல் சான் ஃபிரான்சிஸ்கோவில் இருந்து டெல்லிக்கு வாரம் 3 முறை ஏர் இந்தியாவின் விமான சேவை துவங்கும் என்று அறிவித்தார். சான் ஃஃபிரான்சிஸ்கோ மற்றும் அதைச் சுற்றி அமைந்துள்ள சிலிக்கான் வேல்லி நகரங்களில் 5 லட்சம் இந்தியர்களுக்கும் மேலாக வசிக்கிறார்கள். குறைந்தது ஒரு லட்சம் இந்தியர்கள் அடிக்கடி வந்து போகிறார்கள். இவர்கள் கேத்தே பசிஃபிக், சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் உட்பட்ட அமெரிக்க, ஐரோப்பிய, ஆசிய விமான சேவைகளைப் பயன்படுத்துகிறார்கள்.
ஒருமுறை இந்தியா போய்வரச் சராசரிக் கட்டணம் $1500. வழியில் துபாய், எமிரேட்ஸ், லண்டன், ஃப்ராங்ஃபர்ட், ஹாங்காங் போன்ற தம் நாட்டு நகரத்தில் ஒரு நிறுத்தம் வைப்பதால் அதிலும் பணம் ஈட்டுகின்றன. இதனால் இந்தியாவைச் சென்றடைய 30 முதல் 36 மணி நேரம்வரை ஆகிவிடுகிறது. இப்படிப் பண விரயம், நீண்டநேரப் பயணத்தால் களைப்பு தவிர இந்தியாவுக்கு அன்னியச் செலாவணி இழப்பும் ஏற்பட்டுக் கொண்டிருந்தது.
கடந்த ஆண்டு இந்திய அரசின் விமானத்துறை இணைமந்திரி வந்திருந்தபொழுது அவரைச் சந்தித்து விமானசேவை துவக்க வேண்டியதன் அவசியத்தை விளக்கி மனு அளித்தோம். வழக்கமான அரசியல்வாதிகள்போல மறந்து விட்டாரோ என்றுதான் நினைத்தோம். ஆனால் கோரிக்கையைப் பரிசீலித்து அமுல்படுத்தி விட்டார்கள். ஒரு விமான வழித்தடத்தைத் துவக்கச் சாதாரணமாக 2 வருடங்கள் பிடிக்கும். ஆனால் பிரதமரின் அக்கறையினால் அதிகாரிகள் அதிவேகமாக வேலை செய்து 3 மாதங்களில் இதைச் சாத்தியப் படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
238 இருக்கைகள் கொண்ட போயிங் 777-200LR விமானம் இந்தச் சேவைக்கு பயன்படுத்தப்படும். துவக்கக் கட்டணம் $999 மட்டுமே. அதைவிட முக்கியம், எகானாமி வகுப்பில் காலை ஒடுக்காமல் வசதியாக உட்காரும்படி இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன. நிற்காமல் (Non-stop) பறந்து நேரடியாக டெல்லியை 16 மணி நேரத்தில் அடைகிறது. வேறெந்த விமானமும் இத்தனை விரைவாகச் சென்று அடைவதில்லை. சவுகரியமாகக் காலை 10:00 மணிக்குக் கிளம்பி டெல்லியில் மதியம் 3:00 மணிக்குச் சென்றுசேர்கிறது. பறக்கும் கால அவகாசத்தில் மூன்றுமுறை இந்திய உணவுகள் வழங்கப்படும். |
|
முதலில் வருபவர்களுக்கு இலவசமாக அமெரிக்காவுக்குள் செல்லும் டிக்கெட், ஃப்ரீக்வென்ட் ஃப்ளையரில் பதிபவர்களுக்கு 5000 போனஸ் புள்ளிகள் எனப் பல கவர்ச்சியான அம்சங்களும் உள்ளன. தவிர, ஸ்டார் அல்லையன்ஸிலும் இந்தப் புள்ளிகளை பயன்படுத்திக் கொள்ளலாம்.
டெல்லியை அடைந்து 2 மணி நேரத்தில் இந்தியாவின் அனைத்து முக்கிய நகரங்களுக்கும் தொடர்பு விமானங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. மொத்தம் 20 மணி நேரத்திற்குள் சான் ஃபிரான்சிஸ்கோவில் இருந்து உங்கள் நகரத்துக்குப் போய்ச் சேர்ந்துவிடலாம். இமிக்ரேஷன்/கஸ்டம்ஸ் கிளியரன்ஸ்களை இறுதியாக இறங்கும் விமான நிலையத்திலேயே செய்துகொள்ளலாம்.
"ஏர் இந்தியா சேவை மேம்படுத்தப்பட்டுள்ளது, அதன் பழைய குறைகளை மறந்து விடுங்கள். அதையும் மீறிக் குறை இருந்தால் எந்தப் பயணியும் ஏர் இந்தியாவின் தலைவரையே நேரடியாக அணுகலாம்" என்கிறது நிர்வாகம். பயணிகள் அதிகரிக்க, அதிகரிக்க விமானசேவை எண்ணிக்கையும் அதிகரிக்கப்படும்.
இந்தியப் பயணிகள் ஏர் இந்தியாவை ஆதரித்தால் நேரமும் பணமும் மிச்சம்; இந்தியாவும் பயன்பெறும்.
ச. திருமலைராஜன் |
|
|
More
தெரியுமா?: அமெரிக்காவில் முன்னணி கிரிக்கெட் தாரகைகள் தெரியுமா?: டாலஸ் தமிழ்மன்றம் தெரியுமா?:சிலிக்கன் வேல்லியில் 'சில்லு' கர்நாட்டிக் ப்ரீமியர் லீக்: சங்கீத சாம்ராட் போட்டி தெரியுமா?: லட்சுமி மூர்த்திக்கு SEACOLOGY விருது தெரியுமா?: இந்திய ஓய்வூதியம் பெறுவோர் SBI கிளையில் உயிர்ச் சான்றிதழ் பெறலாம் தெரியுமா?:கிச்சன் கில்லாடி போட்டி முடிவுகள் தெரியுமா?: PNG ஜுவெல்லர்ஸ் ஃப்ரீமான்ட் கிளை துவக்கம்
|
|
|
|
|
|
|