பேராசிரியர் NVS பாராட்டு விழா தமிழக அரசின் அறிவிப்புகள் 3rd i வழங்கும் சர்வதேச தெற்காசியத் திரைப்பட விழா ஆங்கிலத்தில் நாலாயிர திவ்யப்ரபந்தம் "நம்மஊரு நவராத்திரி நச்" CIF: கிச்சன் கில்லாடி சமையல் போட்டி ஸ்வேதா பிரபாகரன்: சேம்பியன் ஆஃப் சேஞ்ச்
|
|
|
|
|
உலகளாவிய தொழில்துறைத் தலைவர்களை வரவழைத்து சர்வதேச முதலீட்டாளர் மாநாட்டை நடத்தியதில் தமிழகத்தின் தொழில்துறைச் சாதனைகள் உலகம் அறியவந்துள்ளது. முன்னதாக ஆகஸ்ட் மாதம் இந்திய அரசின் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் தமிழகத்தில் சென்னை உட்பட 12 மாவட்டங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டன. இதனால் தமிழகமெங்கும் தொழில் முன்னேற்றமும் வேலைவாய்ப்புக்களும் பல்கிப்பெருகும் சூழல் ஏற்பட்டுள்ளது.
இந்திய அளவில் சென்னை குறிப்பிடத்தகுந்த வளர்ச்சியின் காரணமாக ரியல் எஸ்டேட் வாய்ப்புகளில் நல்லதொரு இடத்தைத் தக்கவைத்துக் கொண்டுள்ளது. சமீபத்தில் இந்தியா பிராபர்டி டாட் காம் வெளியிட்ட "சென்னையில் ரியல் எஸ்டேட் முதலீட்டிற்குத் தகுந்த இடங்கள்" என்ற ஆய்வறிக்கை, புதிதாகத் தொடங்கப்பட்ட மெட்ரோரயில் சேவைமூலம் சென்னையின் ரியல் எஸ்டேட் வணிகம் மேம்பட்டுள்ளதாகவும், இந்த ரயில் நிலையங்களைச் சுற்றி 700-800 மீட்டர் சுற்றளவுக்குள் வீடு, மனை வாங்க போட்டிகள் இருக்கும்" என்றும் குறிப்பிடுகிறது. சென்னை வடக்கு மற்றும் சென்னை மேற்குப் பகுதிகளில் முதலீடு செய்ய அதிகம் ஆர்வம் காணப்படுகிறது. கூடுவாஞ்சேரி, கேளம்பாக்கம், தாம்பரம் மேற்கு, ஒரகடம், ஊரப்பாக்கம்முதல் ஸ்ரீபெரும்புதூர்வரையிலான பகுதிகளில் முதலீடு செய்தால் நல்ல வருமானம் பெறலாம் என்பது நிபுணர்களின் கணிப்பு. "சென்னையில் வீடு, மனை வாங்க இதுவே சரியான தருணம்" என்கிறார்கள்.
இந்தியா பிராப்பர்டி டாட் காம் நிறுவனத்தின் முதன்மைச் செயல் அதிகாரி கணேஷ் வாசுதேவன், "தமிழகத்தின் ரியல் எஸ்டேட் தலைநகரமாகச் சென்னை இருந்தாலும், கோயமுத்தூர், திருச்சி, மதுரை, சேலம் போன்றவை நகரங்களிலும் பல புகழ்பெற்ற பில்டர்கள் ப்ராஜெக்டுகளைத் தொடங்கியுள்ளனர். இவற்றின் தொழில்வளர்ச்சி முதலீட்டாளர்களை ஈர்க்கிறது. தமிழகத்தின் இந்நகரங்களில் வீடு, மனைகள் வாங்க இதுவே சரியான தருணம்" என்கிறார். |
|
சர்வதேச அளவில் இந்தியா பிராபர்டி டாட் காம் நடத்தும் சொத்துக் கண்காட்சியான 'கிருஹப் பிரவேஷ்' மிகுந்த பாராட்டுதலைப் பெற்றுள்ளது. இந்த பிராபர்டி ஷோ மீண்டும் அமெரிக்காவில் பிரபல பில்டர்களின் ஏராளமான ப்ராஜெக்டுகளுடன் விரைவில் நடக்க உள்ளது. முதலீடு செய்ய விரும்பும் வெளிநாட்டு இந்தியர்களுக்கு இது மிகச்சிறந்த வாய்ப்பு.
செய்திக்குறிப்பிலிருந்து |
|
|
More
பேராசிரியர் NVS பாராட்டு விழா தமிழக அரசின் அறிவிப்புகள் 3rd i வழங்கும் சர்வதேச தெற்காசியத் திரைப்பட விழா ஆங்கிலத்தில் நாலாயிர திவ்யப்ரபந்தம் "நம்மஊரு நவராத்திரி நச்" CIF: கிச்சன் கில்லாடி சமையல் போட்டி ஸ்வேதா பிரபாகரன்: சேம்பியன் ஆஃப் சேஞ்ச்
|
|
|
|
|
|
|