| அரங்கேற்றம்: ரித்திகா ஸ்ரீனிவாசன் அரங்கேற்றம்: ரோஹிதா பாஸ்கர்
 அரங்கேற்றம்: பிரியங்கா
 ஆண்டுவிழா: அமெரிக்கத் தமிழ்ப்பள்ளிகள்
 நியூ ஹாம்ப்ஷயர் இந்து ஆலய நிகழ்ச்சிகள்
 ஆண்டுவிழா: பாலசம்ஸ்கிருதி சிக்ஷா
 ஆண்டுவிழா: குமாரசாமி தமிழ்ப்பள்ளி
 ஆண்டுவிழா: ஹுஸ்டன் தமிழ்ப்பள்ளி
 மாதா ஸ்ரீ அமிர்தானந்தமயி அமெரிக்க விஜயம்
 போலிங்புரூக்: முள்ளிவாய்க்கால் நினைவஞ்சலி
 நாட்யா: 'பாலகாண்டம்'
 பாரதி தமிழ்ச் சங்கம்: 'அன்னபூர்ணா'
 ஆண்டுவிழா: சன்ஸ்கிருதி நாட்டியப்பள்ளி
 GATS: மகளிர்தினம்
 
 | 
											
	|  | 
											
												|  | 
                                            
	|  | 
											
	|  | 
											
												| மே 3, 2015 அன்று மிசவுரி சிடி (டெக்சஸ்) தர்குட் மார்ஷல் உயர்நிலைப்பள்ளியில் மீனாட்சி தியேட்டர்ஸ் 'மாமா விஜயம்' என்ற நாடகத்தை வழங்கியது. ஸ்ரீரங்கத்து அம்மாஞ்சி மாமா அமெரிக்காவுக்கு விஜயம்செய்தால் என்ன நடக்கும் என்ற கேள்வியுடன் தொடங்கி, குடும்பம், தர்மம் பற்றிய விவாதங்களும், நகைச்சுவையும் சேர்ந்த இனிய கலவையாய் அமைந்திருந்தது இது. 
 அரங்கனின் அடிமையாய் வாழ்ந்தும், அப்பளம் விற்றும் 'உண்மையே வெல்லும்' என்று வாழும் ரங்காச்சாரி வீட்டுக் கல்யாணத்தை 'டௌரி கல்யாணமாக' மாற்ற முயற்சிக்கிறார் சம்பந்தி சடகோபன். 'காசேதான் கடவுளப்பா' என்று மனம்மாறி அமெரிக்காவிற்கு 'மாமா விஜயம்' செல்ல அங்கு 'நடந்தது என்ன'? இதுபோன்ற நாடகத்தை ரசிக்க இந்தியாவில் வளர்ந்து, அமெரிக்காவில் சில வருடங்களாவது வாழ்ந்திருக்க வேண்டும். அமெரிக்காவாழ் இந்தியர்கள் ரசிக்கும்படியான கதைக்களத்தைத் தேர்ந்தெடுத்த கதாசிரியர் சந்திரமௌளிக்கு ஒரு சபாஷ். பணம் வாழ்வில் ரொம்ப அவசியம் என்று ரங்காச்சாரி வழியாகச் சொல்லும் அதே கதையின் இன்னொரு பக்கத்தில் பொருளைத்தேடும் முயற்சியில் நாம் தொலைப்பது என்ன என்ற கேள்வியை ராகவன், கோபி வழியாக நம்முன் வைத்திருப்பது ரசிக்கத்தக்க முரண்.
 
 மருத்துவர் சாரநாதன் நடிகராகவும் இயக்குனராகவும் கவர்ந்தார். ஒரு நடுத்தரக் குடும்பத் தலைவியாக லலிதா, அவரது அமைதியான மகளாக ஸ்ரீமதி, அமெரிக்க வாழ்வுபற்றிக் கேள்வியெழுப்பும் NRI ராகவனாக கணேஷ், மனஅழுத்தம் கொண்ட ஒரு அமெரிக்க இந்தியனாக மணி, அதன் எதிர்ப்பதமாய் ப்ரியா, நல்ல பாலே/பரதநாட்டியப் பெண்ணாக சுரபி, ட்விட்டர் பைத்தியமாக சதீஷ், நகைச்சுவை ஏஜண்ட் நாசா நச்சுவாக விஷி, வெங்காய மண்டி அன்வராக செந்தில், சுயநல மானேஜராக முரளி, பலசரக்கு வியாபாரியாக கோவிந்தன் - இப்படிக் கதாபாத்திரத்தை உணர்ந்து நடித்த அத்தனை பேருக்கும் பாராட்டுக்கள். பாடல்கள், பின்னணி இசை, ஒளியமைப்பு, மேடைநிர்வாகம் என்று அனைத்துத் துறையினரின் உழைப்பும் நாடகத்தின் பலம்.
 | 
											
												|  | 
											
											
												| நடராஜ கிருஷ்ணன், ஹூஸ்டன், டெக்சஸ்
 | 
											
												|  | 
											
	|  | 
											
												| More 
 அரங்கேற்றம்: ரித்திகா ஸ்ரீனிவாசன்
 அரங்கேற்றம்: ரோஹிதா பாஸ்கர்
 அரங்கேற்றம்: பிரியங்கா
 ஆண்டுவிழா: அமெரிக்கத் தமிழ்ப்பள்ளிகள்
 நியூ ஹாம்ப்ஷயர் இந்து ஆலய நிகழ்ச்சிகள்
 ஆண்டுவிழா: பாலசம்ஸ்கிருதி சிக்ஷா
 ஆண்டுவிழா: குமாரசாமி தமிழ்ப்பள்ளி
 ஆண்டுவிழா: ஹுஸ்டன் தமிழ்ப்பள்ளி
 மாதா ஸ்ரீ அமிர்தானந்தமயி அமெரிக்க விஜயம்
 போலிங்புரூக்: முள்ளிவாய்க்கால் நினைவஞ்சலி
 நாட்யா: 'பாலகாண்டம்'
 பாரதி தமிழ்ச் சங்கம்: 'அன்னபூர்ணா'
 ஆண்டுவிழா: சன்ஸ்கிருதி நாட்டியப்பள்ளி
 GATS: மகளிர்தினம்
 
 | 
											
	|  | 
											
												|  | 
                                            
												|  | 
                                            
											
											
                                            
												|  | 
											
												|  | 
											
												|  |